தேவையானவை:

காளான்..............................1 /2 கிலோ
கறிமசால் பொடி..............20கிராம்.
மஞ்சள் பொடி.................  கொஞ்சம்
பெல்லாரி.......................... 2
தேங்காய் துருவல் ............... கைப்பிடியளவு
முந்திரி................................8
கறிவேப்பிலை.................ஒரு கொத்து
உப்பு......................................தேவையான அளவு
எண்ணெய்..........................3 தேக்கரண்டி.

செய்முறை:

காளானைத் துடைத்து, அதில் ஒட்டியுள்ள அழுக்கை எடுத்துவிட்டு, கழுவி நறுக்கவும். பெல்லாரியை நறுக்கவும். தேங்காய் + முந்திரியை நைசாக அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் வெங்காயம் போட்டு, உப்பும் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், காளானைப் போட்டு வதக்கி, அதிலேயே மஞ்சள் பொடி+ கறிமசாலா பொடி போட்டு ஒரு புரட்டி விட்டு, அதிலேயே அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு வேண்டிய அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் இறக்கி விடவும்.

இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம் எதற்கு வேண்டுமாலும் தொட்டு சாப்பிடலாம்.

Pin It