தேவையானவை:

அரிசி................1 ஆழாக்கு
பெரிய கல்லாமணி/கிளி மூக்கு மாங்காய்..1
இஞ்சி ...................1 /2 இன்ச் நீளம்
பச்சை மிளகாய்...........4
தாளிக்க.. கடுகு, சீரகம்,உ.பருப்பு ..தலா 1 /4 தேக்கரண்டி
பெருங்காயம்...........கொஞ்சம்
எண்ணெய்..............3 தேக்கரண்டி .
கறிவேப்பிலை+மல்லித்தழை...கைப்பிடி
உப்பு............................தேவையான அளவு
சீனி.............................1 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை 2 மடங்கு நீர்விட்டு குக்கரில் வேகவிடவும். அதனை ஓர் அகன்ற பாத்திரத்தில் கொட்டி, ஒரு கரண்டி நெய்/எண்ணெய் விட்டுக்கிளறி ஆற வைக்கவும். மாங்காயை தோல் நீக்கி காரட் சீவும் கட்டையில் சீவி வைக்கவும். இஞ்சியை நன்றாக அரைக்கவும்.; ப.மிளகாயை இரண்டாகக் கீறவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் அதில், கடுகு,உ.பருப்பு, சீரகம் போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை,மிளகாயப் போடவும்.தீயைக் குறைத்து வைக்கவும். உடனேயே சீவிய மாங்காய், உப்பு, சீனி,பெருங்காயம் போட்டு ஒரு கிளறு கிளறவும். அதிலேயே சாதத்தைப் போட்டு கிளறவும். பின் அடுப்பை அணைத்துவிட்டு மல்லியை நறுக்கித் தூவி இறக்கிவிடவும்.

இதில் தேவைப்பட்டால் நெய், தேங்காய்த் துருவல், முந்திரி, உலர் திராட்சை சேர்க்கலாம். அவரவர் பிரியப் படி.. சுவை சூப்பரோ சூப்பர்.

Pin It