எவ்வளவு பெரிய தவறு நடந்து விட்டது என்று யாருக்‍கும் புரியவில்லை. கடந்த இரண்டாயிரம் வருடங்களாகவே இந்தியாவில் இதுதான் நடந்து கொண்டிருக்‍கிறது. இப்படியே பழகிப் போய்விட்டார்கள் இந்தியர்கள். அலெக்‍சாண்டரிலிருந்து ஆங்கிலேயர்கள் வரை இந்தியர்கள் என்றால் இளப்பமாகிவிட்டது. இப்படியே இந்தியாவை சுரண்டி சுரண்டி தங்களை வளமாக்‍கிக்‍ கொண்ட அந்நியர்கள் ஏராளம். இந்த அவலம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்‍கிறது. எப்படியெல்லாம் திருடுகிறார்கள் இந்த அயல்நாட்டவர்கள். விட்டால் மொட்டை அடித்து, காதுகுத்தி சாப்பிடுவதற்கு வாழைப்பழமும் ஒன்றுக்‍கு இரண்டாக கொடுத்துவிட்டுச் செல்வார்கள் இந்த அந்நியர்கள்.

vikram_363ஒரு திரைப்படத்தை கூட விடமாட்டேன் என்கிறார்கள். என்ன அநியாயம். ஒரு கதையை கருவாக சுமந்து, அதை மாதக்‍கணக்‍கில் வளர்த்து, அழகுபடுத்தி, திரைக்‍கதை அமைத்து, அந்தக்‍ கதையை, கதாநாயகனில் ஆரம்பித்த, தயாரிப்பாளர் வீட்டு நாய்க்‍குட்டி வரை சொல்லி புரியவைத்து தாவு தீர்ந்து ​போய், ஆன் ப்ரொடக்‍ஷனுக்‍கு சென்று, கதாநாயகியின் அம்மாவுக்‍கெல்லாம் விசிறிவிட்டு, ஆப்பிள் ஜூஸ் கொடுத்து, சொல்வதைக்‍ கேட்காத கேமராமேன் மேல் கொலைவெறி இருந்தாலும் அன்புடன் அண்ணா என்று அழைத்து, அடிபணிந்து போய், போஸ்ட் ப்ரொடக்‍ஷனுக்‍குள் நுழைந்தால், மிச்ச இருக்‍கும் உயிரையெல்லாம் எடுக்‍க எடிட்டிங், சி.ஜி, கலர்கரெக்‍ஷன், டப்பிங் என வரிசை கட்டி நிற்கும் அத்தனையையும் கடந்து, படத்திற்கு அழகான தமிழ்ப் பெயரை வைத்து, யு சர்டிபிக்‍கெட் வாங்கி வெளியே வந்தால், திருநெல்வெலியிலிருந்து எதிர்ப்பு வரும் படத்தின் பெயரை மாற்றுகிறாயா? இல்லை வாயைச் சேர்த்து வெட்டவா? என்று.

பகீரதனைப் போல் பிரயத்தனப்பட்டு அத்தனையைம் கடந்து வந்தால், படம் ரிலீசாகிய அடுத்த நாள் கூவி, கூவி விற்றுக்‍ கொண்டிருப்பான். அந்த சகோதரனையும் மன்னித்து விட்டு, வரவிருக்‍கும் நெஞ்சுவலியை எதிர்பார்த்துக்‍ கொண்டிருக்‍கும் பொழுது, அதே திரைப்படத்துக்‍கு வெள்ளையடித்து, டிஸ்டம்பர் பூசி, வேறு தலைப்பிட்டு இன்னொரு படம் ஓடிக்‍ கொண்டிருக்‍கும். முருகா ஏன்? சிறிது சிறிதாக கொல்ல வேண்டும். கையில் இருக்‍கும் வேலை எடுத்து நடுநெஞ்சில் குத்தி கொல்வதற்கு உன்னைவிட்டால் வேறு யாருக்‍கு உரிமையிருக்‍கிறது, என்று கடவுளிடம் தனியாக ஒரு இயக்‍குனர் பேசிக்‍ கொண்டிருப்பதைப் பார்த்தால், பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். இயக்‍குனருக்‍கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றல்லவா நினைப்பார்கள். இப்படியா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஒரு திரைப்படத்தை டிட்டோவாக காப்பியடிப்பார்கள்.

அந்த சீன்பென் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருந்தேன். ஒரு தமிழ்ப்படத்தை காப்பியடிக்‍க எப்படி மனசாட்சி வந்தது அவருக்‍கு. மில்க்‍ படத்திற்கு கொடுத்த ஆஸ்கர் விருதையெல்லாம் பிடுங்க வேண்டும். எப்படி இப்படியொரு காப்பிடிக்‍கும் மனநிலையில் உள்ளவருக்‍கு ஆஸ்கர் விருது கொடுத்தார்கள். ஆஸ்கர் விருது கமிட்டியினர் இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டார்கள் என்பதை நம்பவே முடியவில்லை.

ஐ ஆம் சாம் என்கிற படத்தைப் பார்த்தால் புரியும் அனைவருக்‍கும். நமது விக்‍ரம் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தை அப்படியே டிட்டோ செய்து வைத்திருக்‍கிறார்கள். ஈயடிச்சான் காப்பி தெரியுமா உங்களுக்‍கு...

பரீட்சை எழுதிக்‍ கொண்டிருக்‍கும் போதுதான் ஒரு ஈ எழுத விடாமல் எப்பொழுதும் கையை சுற்றி சுற்றி வந்து தொந்தரவு கொடுத்துக்‍ கொண்டிருக்‍கும். அதை அப்படியே பேப்பரோடு பேப்பராக வைத்து நசுக்‍கிவிட்டால், ரத்தம் தெறித்து பேப்பரில் ஒரு லோகோ விழும். இந்நிலையில், பின்னே அமர்ந்து காப்பியடித்துக்‍ கொண்டிருக்‍கும் திறமைமிக்‍க மாணவன், அதே போன்றதொரு லோகோ வேண்டும் என்கிற விருப்பத்தின் பேரில், ஒரு ஈயை தேடிப்பிடித்து பேப்பருக்‍கு நடுவில் வைத்து நசுக்‍கி ஒரு லோகோவை உருவாக்‍குவான். விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்‍கு இந்த செயலைத்தான் பொறுத்துக்‍ கொள்ள முடியாது. இதற்குத்தான் ஈயடிச்சான் காப்பி என்று பெயர் வைத்திருக்‍கிறார்கள்.

இந்த காப்பியடிக்‍கும் கலை சீன்பென்னுக்‍கு எப்படி தெரிந்தது என்றுதான் புரியவில்லை. தெய்வத்திருமகள் படத்தை ஈயடிச்சான் காப்பி செய்து வைத்திருக்‍கிறார் மனசாட்சியே இல்லாத மனிதப்பிறவி. விக்‍ரமை பார்த்து அப்படியே நடித்திருக்‍கிறார். ஒருவன் தலைமுடியை வெட்டிக்‍ கொள்வதைக்‍ கூட அப்படியே காப்பியடிக்‍க வேண்டுமா என்ன? மெண்டலி சேலஞ்ட் மனிதர்களுக்‍கு மத்தியில் அந்த ஹேர் ஸ்டைல் புகழ்பெற்றதா என்ன? அவர்கள் எல்லாம் அப்படித்தான் வெட்டிக்‍ கொள்ள விரும்புவார்களோ, விக்‍ரம் ஏதோ, இப்படி தலைமுடியை வெட்டிக்‍ கொண்டால் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போன்று இருக்‍கும் என்று நினைத்திருப்பார். அதைப்பார்த்து அப்படியே காப்பியடிக்‍க வேண்டுமா என்ன? இதற்கு பெயர்தான் ஈயடிச்சான் காப்பி என்பது. ஒரு கிரியேட்டருக்‍கும், காப்பியடிப்பவருக்‍கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்.

இவற்றைக்‍ கூட பொருத்துக்‍ கொள்ளலாம். ஆனால், அந்த நான்கு பேர்..... கடவுளே....... அதே நான்கு பேர். ஏன் 5 பேராக இருக்‍கக்‍ கூடாதா? இல்லை 3 பேராக இருந்தால் அமெரிக்‍கர்கள் கோபித்துக்‍ கொள்வார்களா? இல்லை 2 பேராக இருந்தால் படத்தின் தரம் குறைந்து போய்விடுமா? 4 பேர் என்றால் 4 பேர்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த 4 பேருக்‍கு வேறு வேலையே இல்லை. அந்த 4 பேரை பார்த்துக்‍ கொள்ள வேறு ஆட்கள் யாரும் தேவையில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்து்க கொள்வார்கள். அவர்களின் ஒரே பிரச்சனை கதாநாயகனின் பிரச்சனைதான். அவர்களுக்‍கென்று சொந்தப் பிரச்சனை எதுவும் கிடையாது என்று தமிழில் சொல்லப்பட்டது போல் தெளிவாக சொல்வதற்கு அமெரிக்‍கர்களுக்‍கு அறிவு பத்தாது என்றே தோன்றுகிறது.

iamsamஎவ்வளவுதான் காப்பியடித்தாலும் சந்தானத்தைப் போன்று ஒரு கேரக்‍டரை யோசிக்‍க முடிந்ததா அவர்களால், உலகத்திரைப்படம் எடுக்‍கிறேன் என்று சொல்லிக்‍ கொள்கிறார்கள்.

குழந்தையை பெற்றுக்‍ கொடுத்ததும் ஒரு தாய், சீன்பென் போன்ற பைத்தியக்‍காரனை பொறுத்துக்‍ கொள்ள முடியாமல் ஓடிவிடுகிறாள். இப்படி தமிழ்நாட்டில் எங்காவது நடக்‍குமா? பெற்ற தாய் குழந்தையை விட்டு எங்காவது ஓடிப்போவாளா? கணவன் குடிகாரனாய் இருந்தால் என்ன? கூத்தியாள் வைத்திருந்தால் என்ன? இல்லை கூனனாய் இருந்தால்தான் என்ன? கணவனே கண்கண்ட தெய்வம் என்கிற கொள்கையிலிருந்து வழுவாத பாரம்பரியம் மிக்‍க தமிழ் கலாச்சாரத்தில் வாழ்ந்த பெண்கள் உள்ள நாட்டில் இதுபோன்றெல்லாம் நடக்‍குமா?

அதனால் குழந்தையை பெற்றவளை சாகடித்து,  அந்த குழந்தைக்‍கு ஒரு பணக்‍கார சித்தியை உருவாக்‍கி, அவர்களை ஒரே இடத்தில் சந்திக்‍க வைக்‍கும் விக்‍கிரமாதித்தியன் கதை ட்விஸ்ட் எல்லாம் இந்தியர்களுக்‍குத் தான் கை வரும். இதுபோன்ற ட்விஸ்ட் எல்லாம் காப்பியடிப்பவர்களுக்‍கு எப்படி புரியவரும், கிரியேட்டருக்‍கு மட்டும்தான் தோன்றும்.

வசனத்தைக்‍ கூட விட்டு வைக்‍காமல் காப்பியடித்துவிட்டு, வசனம் என்று தங்களுடைய பெயரை போட்டுக்‍கொண்டார்கள் அந்த பெரிய மனிதர்கள். அடுத்தவர் கருத்தை கேட்காமல் எடுத்துக்‍ கொள்வதில் என்னவொரு தடித்தனம்? அதுவும் நமது தமிழ்ப் படம் 2011ல் வெளியாவதற்கு முன்பே, படத்தை அப்படியே சுட்டு 2001ம் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு கில்லாடிகளாக இருக்க வேண்டும்? ஒருபெயருக்‍காவது நன்றி தெய்வத் திருமகள் என்று பெயர்ப்பலகை போட்டார்களா? அதுவும் இல்லை. உரிமம் பெறாமல் திருடி எடுத்துவிட்டு கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தொலைக்‍காட்சிகளில் எல்லாம் பேட்டி கொடுத்திருப்பார்கள் அவர்கள். என்ன செய்வது. கடவுளுக்‍குத்தான் வெளிச்சம்..

என் நண்பன் கூறுகிறான் இப்படியே தொடர்ந்து கூறிக்‍ கொண்டிருந்தால் அந்த ஆங்கிலப்படத்தை இயக்‍கிய இயக்‍குனர் செருப்பால் துரத்தி துரத்தி அடிப்பார், அதனால் அடக்‍கிவாசி  என்று கூறுகிறான். எதற்கு அப்படி கூறினான் என்றுதான் புரியவில்லை.

Comments

22 comments

22
aathmaarthi
வலிமையான பதிவு.நல்லதொரு விமர்சனம்..சாட்டையை சொடுக்கியமைக்கு வாழ்த்துக்கள்.
peru
arumaiyaana seruppadi....
இளமுருகன்
படத்தை மட்டும் இல்லை பாடல்களையும் சேர்த்து சுட்டிருக்காங்க
katz
haa haa super
FAREETH
SAARAY ROMBALAIKKU APROM KAAPIYADICHAVATHU ORU NALLA PADAM PARKURA MAATHIRI VANTHURUKKU ATHU PIDIKALIYAA , AYYO AYYO,
surya
படம் வருவதற்கு முன்னரே செய்தி வெளியாகிவிட்டது. ஐ ஆம் சாமின் தழுவல்தான் தெய்வத்திருமகள் என்று. படம் பார்த்து மெய்சிலிர்த்துப் போனதும் உண்மைதான். நண்பர்கள் அப்பட்டமான காப்பி என்று சொன்ன போது கூட, இது நிச்சயமாக டிட்டோ கிடையாது, ஒரு படத்தில் இம்ப்ரஸ் ஆகி பின் உருவாக்கப்பட்ட புது ஆக்கம் என்று வாதிட்டேன். ஆனால் ஐ ஆம் சாம் திரைப்படத்தை பார்த்ததும், சப்பென்று ஆகிவிட்டது. இவ்வளவுதானா தமிழ்த் திரையுலகம் என்றாகி விட்டது. மனதுக்கு வருத்தமாகவும் இருந்தது. உலகத்திரைப்படம் பார்க்கும் இயக்குனர்கள், ரீமேக் இயக்குனர்களாக மாறி வருவது அவ்வளவு ஆரோக்கியம் இல்லை என்றே தோன்றுகிறது. அதுவும் விஜய் ‍போன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய இயக்குனர்கள் நம்பிக்கையை குலைக்கும் விதமாக நடந்து கொள்வது தமிழ் திரையுலகுக்கு இருக்கும் மரியாதையை குறைத்துவிடும். இந்திய அளவில் தமிழ்த் திரையுலகுக்கு என்று ஒரு மரியாதை உள்ளது. இங்கு சிறந்த க்ரியேட்டர்ஸ் உள்ளனர் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டிலிருந்து தொழில் நுட்பத்தை எடுத்துக்கொள்ளலாம். கதையைக் கூடவா? நம்மிடம் இல்லாத கதையா? எத்தனை வாழ்வியல் கதைகள் உள்ளன. மிகத் திறமையான, உருக்கமான ஆக்கம்தான் தெய்வத்திருமகள், ஆனால் அது ஒரு டிட்‍டோ, மறுக்க முடியாத டிட்டோ.மொழியும், நடிகர்களும், பெயர்களும் மட்டும்தான் மாறியிருக்கின்றன.
anandhan
sir, vimarsanam endra perla comedy pannadinga.
Mani
Ithu onnum tamil cinema kku puthusu illai
Jai Bernard
ok. unga vaira varigalaku paratukal. But friendu, nallatha ennaiku sonnalum, epadi sonnalum nallathuthan. Mudincha nee pudusa edu. illa nallatha kudukanumnu intha kalathula ninaikiravanayum keduthidatha. Nee padikira paadam, eluthura paricha ellame yaro sonnatha thana friendu. Creativa kandathayum, mukiyama ilam manatha kedukratha edukiratha vida, kappi adichi nallatha athapathi erkanave theriyathavangaluku kamikarathu thapu illa nanba.Ethana peru I'm sam padatha pathu irupanga? Ithu en anbana, thalmayana request. please thappa eduthukathinga. God bless u.
Mukund
copy adippadharkum thiramai vendum aiya... innum padam paarkalai, nandraaga ulladhu endru kelvi patten. Anaivarukkum vaazhthukkal
Guest
ஒரு தேங்ஸ் கார்டாவது போட்டிருக்‍கலாம்ல. சுடுறதுல என்ன திறமையா சுடுறது. திருட்டுன்னாலே அது கேவலம்தான். அதுல என்ன திறமையான திருட்டு. ஒரு படத்தை எடுத்தவன் தன்னுடைய படைப்பு திருடப்படுவதை ஒத்துக்‍ கொள்வானா? முறைப்படி படத்தின் உரிமையை வாங்கி, ஐ ஆம் சாமின் தழுவல் என்று டைட்டில் கார்டில் போட்டிருந்தால் நேர்மையை பாராட்டலாம். எந்த இன்டர்வியூவிலாவது, நான் ஐ ஆம் சாம் பார்த்து இம்ப்ரஸ் ஆகிதான் தெய்வத் திருமகள் படத்தை எடுத்தேன் என்று சொல்லியிருக்‍கிறாரா விஜய்...நான் முறைப்படி உரிமம் பெற்றிருக்‍கிறேன் என்று எங்காவது கூறியிருக்‍கிறாரா. ஒரு நாவலை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்தால் அதை மொழி பெயர்த்தவருக்‍கு மொழி பெயர்ப்பாளர் என்ற பெயர் தான் கிடைக்‍குமே தவிர ஆசிரியர் என்ற பெயர் கிடைக்‍காது. இதே விதிதான் சினிமாவுக்‍கும். விஜய் இந்த படத்தை பொறுத்தவதை ரீமேக்‍கர் மட்டும்தான்......... நல்லபடம் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நானும் அதைத்தானே சொல்லியிருக்‍கிறேன்.........விக்‍ரமின் நடிப்பு நேஷனல் அவார்டு கொடுக்‍கக்‍ கூடிய அளவிற்கு சிறந்த நடிப்பு தான். ஆனால் அவர்ட் கமிட்டியினரில் ஒருவராவது சாம் படத்தை பார்த்திருக்‍கும் பட்சத்தில் விருது கிடைப்பது சந்தேகம்தான்.
Guest
copy adippadharkum thiramai vendum aiya... எங்க பள்ளிக்‍கூட வாத்தியார் இத ஒத்துக்‍கவே மாட்டேங்கிறார். நல்லா அவர் மண்டையில உறைக்‍கிற மாதிரி எடுத்து சொல்லுங்க.
deivendran
idhu vimarsaname alla.araivekkatu thanamana report.Imitation agave irunthalum rasikkum vagaiyil kodutha iyakunarai parattavittalum idhupondru vimarsanam endra peyaril eludhamal iruppadhu nalladu.
ramu
oru nalla patathai thamba copy pannanga maniratnam. shankar, gautam menon kv anand ellom mokka hollywood padathai copy panni enga vuttu super hit pannaga vijayoda thappu titlela solli irukunum appuram sila scenes oruvi irukaar athu kandippa thappu neenga etho ivro pmattumthan oruvi irukra mathiri romba arivali mathiri pesantinga plz ithu mathiri padangal kandippa inga hit aganum
ramu
emma oru nalla padatha thampa copy pannaru athu thappa titlela sollala, sila scence oruvi irukaru atu kandippa thappu etho vijay mattum than hollywood copy mathiri solrengele plz see the list nayagan - the godfather ghajini - memonto 7am arivu - inception (upcoming) enthiran - incennontial men nandalala - kikujiro derailed - pachaikili muthucharam fear - kadhal knoden seven - kaka kaka ...... niaiya poikitta iruku ethu venun ungaluku naan solren plz oru nalla padam intha mathiri eluthathinga
வேல்
ஓஹோ.. ! "வஞ்சப்புகழ்ச்சி அணி" என்பார்களே அது இதுதானா? பலே சூர்யா பலே....
surya
நாயகன் மட்டுமா, தேவர் மகனிலிருந்து ஏகப்பட்ட படம் காட்பாதரிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒரு 100 படமாவது இந்திய மொழிகள் அனைத்திலும் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அதற்கும் தெய்வத் திருமகளுக்கும் வித்தியாசமுண்டு. தெலுங்கிலிருந்து ஒரு படத்தை தமிழுக்கு ரீமேக் செய்வது போன்றது தான் இந்த படமும். தெய்வத் திருமகள் ஒரு ரீமேக். மொத்தமாக 5 சீன்களை வேண்டுமானால் தமிழுக்கு தகுந்தாற்போல் மாற்றியிருப்பார்கள். கஜினியை கொண்டு போய் கிறிஸ்டோபர் நாலனிடம் போட்டுக் காண்பித்தால் நிச்சயம் ஒத்துக் கொள்ளமாட்டார். கஜினி ஒன்றும் மெமெண்டோ இல்லை என்று எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்துவிடுவார். பச்சைக்கிளி முத்துச்சரம் பற்றி ஒரு பேட்டியிலேயே கௌதம் கூறியிருக்கிறார். அது நாவலாக இருக்கும் போதே படமாக்கப்பட்டது என்று. டீரெய்ல்ட் படமும் பச்சைக்கிளி முத்துச்சரமும் ஒரு மாத இடைவெளியில் வெளியான திரைப்படங்களாகும். குறைந்த பட்சம் கௌதம் டீரெய்ல்ட் நாவலுக்கு உரிமம் கேட்டு அதன் ஆசிரியரிடம் கேட்டிருக்கிறார். அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. வழக்கம் போல் சுட்டுவிட்டார். இரண்டு படங்களும் நாவலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு கவுதம்மை பாராட்டலாம். ஆனால் ஐ ஆம் சாம் ஒரு ரீமேக். கிகுஜாரோவுக்குத்தான் வாங்கிக்கட்டிக் கொண்டாரே மிஸ்கின். அவரை என்ன கொஞ்சி மகிழ்ந்தார்களா என்ன? 7ம் அறிவு இன்செப்ஷனா. புதுத் தகவலாக இருக்கிறது. இன்செப்ஷனை அப்படியே எடுப்பது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஏதேனும் ஒரு கான்செப்ட்டை மட்டும் உருவியிருப்பார். அது மட்டும்தான் முடியும் அவரால். கிறிஸ்டோபர் நாலன் சரியான குழப்பவாதி. அவரை அதிகபட்சம் முயன்று புரிந்து கொள்ள மட்டும்தான் முடியும். காப்பியடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. தெய்வத் திருமகள் மிகநன்றாக எடுக்கப்பட்டிருப்பதால் தான் கூறுகிறேன். இது தமிழனின் படைப்பு என்று பெருமையடித்துக் கொள்ள முடியவில்லையே
ramu
surya, entha director copy panntha othukittan sollungal gautam first minnale thavira aniatheme copy than gautams upcoming vijay movie name " YOHAN ATHIYAYAM ONDRU"" IS SEEN BY SEEN EVEN COSTUME RIPS OFF FROM 2008 French film ""Largo Winch"" SEE IN WIKIPEDIA. mokka hollywood copy tamil padankaluku deivathirumagal evlavo mel oru cinema rasigara than solren. theatre vittu veli varum pothu ellor kangalilum kanner.. thamilil ipdo oru padam parthu ethanai nalachu tata sumo, periya thadi, mudi rowdykal thaani, item song, double meaning dialogue illamal unmaiyai sonnal sean pennai vida vikram nandragavei "krishna" vaga valthular. anal sila scenes avorada manarizams copy pannathu kandippa vikramoda thappu than. SURYA ITHO SILA COPY PADANGAL vinnai thandi varuvaya - 500 days of summer PATTIYAL - Bangkok Dangerous AUTOGRAPH - MERA NAAM JOKER {HINDI MOVIE } Indira Vizha- Disclosure puthupettai - city of god Vandhan Vendran{ UPCOMING}-Going the Distance KO - ‘State of Play’ featured Russell Crowe ROJA - SUNFLOWER Ayutha Ezhuthu is also inspired from a mexian movie Amores Perros Thenali, directed by K.S.Ravikumar, is also inspired from the movie What about bob Kamal Hassan's much appreciated performance in Avvai Shanmughi is also an inspiration from the movie Mrs.Doubfire and the character portrayed by Robbie Willaims Kamal Hassan's Panchathanthiram, again directed by K.S.Ravikumar is also inspired from the Hollywood black comedy movie Very Bad Things (1998), directed by Peter Berg which is about a prostitute, who is killed during a bachelor party and the attendees turn on each other as the Wedding approaches. Kamal Hassan's another appreciated movie, Guna is also an inspiration from the movie Rain Man, directed by Barry Levinson, which stars Dustin Hoffman and Tom Cruise. Selfish yuppie Charlie Babbitt's father leeaves a fortune to his savant brother Raymond and a pittance to Charlie and they travel cross-country. Munna Bhai MBBS or Vasool Raja MBBS, the remake of the Hindi blockbuster is again an inspiration from the Hollywood movie Patch Adams, directed by Tom Shadyac, which portrayed Robie Willaims as a medical student in the 70's who treated patients, illegally, using humor! Kamal Hassan's Anbe Sivam, is also a film inspired by the Hollywood movie Planes, Trains and Automobiles, which is about a man must struggle to travel home for Thanksgiving, with an obnoxious slob of a shower ring salesman his only companion. Kamal Hassan's Mahanadi is also said to be inspred from the movie Hardcore,, which is about a conservative Midwest businessman, played by Paul Schrader, who ventures into the sordid underworld of pornography in California to look for his runaway teenage daughter who is making porno films in the porno pits of Los Angeles. The last year acclaimed movie Yogi, which had director Ameer as the Hero, is a remake Totsi, directed by Gavin Hood. The film is in turn is an adaptation of the novel Tsotsi, by Athol Fugard. Other movies like City is God, an award winning movie is aid to be the inspiration of Pudhupettai, directed by Selvaraghavan. Brewster's Millions (1985) movie is said to be the inspiration behind superstar Rajinikanth starrer, Arunachalam. The movie is about a minor league baseball player, who has to waste $30m in 30 days in order to inherit $300m; however he's not allowed to tell anyone about the $300m deal. Tamil movie Vaanam, which is again a remake of Telugu hit move Vedam, is a story of the Hollywood movie Powder Blue, while certain claim it to be a story similar to another award winning Hollywood movie Crash. Powder Blue is about four Los Angelenos -- a mortician, an ex-con, a suicidal ex-priest, and a stripper are brought together on Christmas Eve by a mixture of circumstances. The recent blockbuster sci-fic entertainer Endhiran by Shankar, starring Rajinikanth, is said to be an inspiration too! Yes Bicentennial Man, by Robbie Williams which also has the same plot of an Android endeavors to become human as he gradually acquires emotions. Indran Chandran - Moon over parador Apoorva Sahodarangal - Corsican Brothers Enakkul Oruvan - The Reincarnation of Peter Proud Anbe Sivam - Planes, Trains and Automobiles Nayagan - The Godfather, Once upon a time in America Avvai Shanmugi - Mrs Doubtfire Panchathantiram - Very Bad Things Nammavar - The Class of 198412B - Sliding Doors Magalir Mattum - 9 to 5 Vettri Vizha - Bourne Identity Julie Ganapathy - Misery Kaathala Kaathala - Two Much Sathileelavathi - She Devil Thiruda Thiruda - Butch Cassidy and the Sundance Kid Mahanadi - An Innocent Man, Hardcore Anjali - Son RiseAsuran - Predator Whistle - Urban Legend May Maadham - Roman Holiday Soora Samharam - WitnessNala Damayanthi - Green Card Kadhal Kirukkan - Primal Fear Kadhal Kondein - Fear, Klassenfahrt Alaipayuthey - Barefoot in the Park Indian - Falling Down Kandukonden Kandukonden - Sense and Sensibility Kadhal Kottai - The shop around the corner Arunachalam - Brewster's Millions Michael Madana Kamarajan - Goldrush (Climax) Ammavasai Iravil - The Friday Freak Jenma Natchathiram - Omen Vaa Arugil Vaa - Child's Play Naalaya Manithan - Silent Rage Enakku 20 Unakku 18 - On the Line My dear Marthandan - Coming to America Virumandi - Life of David Gale Rettaival Kuruvi - Micki + Maude Pammal K Sambandam - The Bachelor .........................................its going ............. so this is the fact surya thamila super hit padam ellam kandippa mostly hollywood copy or inspired than.. oru sila thavira paruthi veeran, subramaniyapuram, nadodigal nam mannin padangal maniratnam , shankar, gautam kv anand ellam antha hollywood kathaiyai mattum eduthu enga thamiliku etha pathiri panni super hit akkitiranuga ana vijay i am sam most scenes copy so athan neenga epdi eluthineenga but surya deivathirumagal nam tamizh makkal ellorum ( i am sam parthavargalum) kandippa parka vendiya padam.. :-)...............
ramu
@surya vaagai sooda va (upcoming) - the road home(2000) chinese romantic drama film directed by Zhang Yimou
Guest
appo thairiyamma copy adikkalam pola irukke
arunkumar
கீற்று வில் விமர்சனம் எழுதுபவர்களுக்கு தாங்கள் ஏதோ பெரிய படைப்பாளி என்று நினைப்பு. உலகத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் காபி தாம் அடிகின்றோம். நல்ல விசயங்களை நமக்கு ஏற்றார் போல் மாற்றி யோ அல்லது மொழியாக்கம் செய்து அல்லது ரீமேக் செய்தோ பார்ப்பதில் தவறே ஏதும் இல்லை. அழகர்சாமியின் குதிரை மட்டும் ஏதோ பெரிய இயக்குனரின் சொந்த படைப்பு மாதிரியே கூறும் அதி புத்தி சாலிகளே அதுவும் ஒருவருடைய படைப்பே. அது எழுத்தை காட்சி ஆக மாற்றினார்கள். இது காட்சி யையே இன்னொரு மொழியில் அதற்கேற்ப காட்சி ஆக இயக்கினார்கள். அவ்வளுவுதான்.
surya
நல்லா எங்க வாத்தியார் மண்டையில ஏர்ற மாதிரி சொல்லுங்க...... பரீட்சையில் பக்கத்துல எழுதுறவன பாத்தா. காப்பியடிக்கிறியாடா ராஸ்கல்ன்னு காதைத் திருகுறாரு. உங்க உபதேசத்தை எல்லா பள்ளிக்கூடத்துலயும் ஃபிரேம் பண்ணி போட்டாவா மாட்டனும். அப்பத்தான் இந்த சமுதாயத்துக்கு அறிவு வரும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.