ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 இருக்கும் சார்!
ஆசிரியர்: நல்லா கேளு! முதல்லே இரண்டு கோழி தர்றேன். மறுபடியும் இரண்டு தர்றேன். இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?
மாணவன்: 5 தான் சார்!
ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்! சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?
மாணவன்: 4 சார்.
ஆசிரியர்: குட்!. இப்ப, 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 சார்!
ஆசிரியர்: அது எப்படிறா 5 கோழி வரும்?
மாணவன்: என்கிட்டே ஏற்கனவே ஒரு கோழி இருக்கு சார்.
ஆசிரியர்: !!!!
குட்டீஸ்
ஆசிரியரும் கோழியும்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.