ஒரு கண் டாக்டரிடம் போய் ஒரு வயதான பாட்டி கண்களைப் பரிசோதித்துக் கொண்டார். டாக்டர் கண்ணாடி எழுதிக் கொடுத்தார்.

பாட்டி: டாக்டர், உங்களுக்கு எவ்வளவு பீஸ் ?

டாக்டர்: அறுபது ரூபாய்.

பாட்டி டாக்டரின் மேசையின் மீது 3 பத்து ரூபாய் நோட்டுகளை  வைத்து வீட்டுக் கிளம்பினாள்.

டாக்டர்: பாட்டி, என் பீஸ் அறுபது ரூபாய் என்று சொன்னேன்,  முப்பது ரூபாய் மட்டும் வைத்துச் செல்கிறாயே.  

பாட்டி: நீங்கள் சொன்னது சரிதான், ஆனால், எனக்கு ஒரு கண் தெரியாதே, இருப்பது ஒரு கண்தானே ! அதற்குத்தானே வைத்தியம் பார்த்தீர்கள் !!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.