தற்காப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் மரணம் நிகழ்ந்தாலும், அத்தகைய  தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியவர் மன்னிக்கப்படுகிறார். கீழ்க்க‌ண்ட‌ சூழ்நிலைக‌ளில் அது பொருந்தும்.

• கடுமையான  காயம் அல்லது மரணம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடக்கும்போது;
• பாலியல் வல்லுறவு அல்லது இயற்கைக்கு விரோதமான காம உணர்வை தனித்துக் கொள்ள ஒருவர் நடவடிக்கையில் இறங்கும்போது;
• அரசு அதிகாரிகளை அணுகி தனது விடுதலைக்காக முறையிட முடியாத அளவிற்கும் ஒருவரைச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கும் நேரத்தில்;

அதேபோல் சட்டத்தின் விளைவுகள், குற்றத்தின் தன்மைகளை உணரும் பருவம் அடையும் முன்னர், 12 வயது வரையுள்ள குழந்தைகளது நடவடிக்கையும் குற்றமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில், அந்தக் குழந்தை தனது நடவடிக்கையின் முழு விளைவுகளையும் உய்த்துணரும் பக்குவத்தைப் பெறவில்லை.

ஒரு குற்றம் நடக்கும்போது, அந்தக் குற்றத்தைச் செய்தவர் மனநோயாளியாக இருந்தால், அவர் மன்னிக்கப்படுகிறார்.

Pin It