கூட்டமாக சமூக அமைப்பில் வாழ்வது மனித இனத்திற்கே உரியது. மனிதனைப்போல் வேறெந்த மிருகத்திடமும் சமூக அமைப்பு காணப்படுவதில்லை. எறும்பு கரையான் போன்றவற்றிடம் காணப்படும் சமூக அமைப்பு ஜீன்களால் செதுக்கப்பட்டவை. ஆனால் மனிதனின் சமூக அமைப்பு அவனாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டது.

இஸ்ரேல் நாட்டிற்கு அருகே கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழைய கற்கால ஆயுதங்களும், அவற்றைச் சுற்றி காணப்படும் உணவு பொங்கிய திறந்த அடுப்பு, விறகுகள், மீன் முட்கள், கொட்டைகளை உடைக்கப் பயன்படுத்திய சிறு குழியுடைய பனை போன்ற கற்கள், சிறு கல் கத்தி, சுறண்டும் கல் தகடு போன்றவற்றைப் பார்க்கும்போது அவற்றைப் பயன்படுத்திய நபர்கள் மனிதத் தன்மைகளைப் பெற்றவர்கள் என்று தெரிகிறது. அதன் காலத்தை நிர்ணயித்தபோதுதான் திடுக்கிடும் உண்மை தெரிந்தது. குறைந்தது 750 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை அவை என்பது தெரிந்தது.

இதுவரை நவீன மனிதனின் மூதாதையர்கள் 250 ஆயிரம் ஆண்டுகளில்தான் வாழ்ந்தார்கள் என்று நம்பப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு அதை மேலும் ஒரு அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தள்ளி வைக்கிறது.

- ‍முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It