கி.பி.54ம் ஆண்டு கிளாடியர்ஸ் கொல்லப்பட்டதும் நீரோ ரோமாபுரிச் சக்கரத்தியானான். நீரோவின் தாயார் இளைய அக்கைரிப்பினா ஆவார். மகன் மூலம் மறைமுக ஆட்சி நடத்த எண்ணிய இளைய அக்கிரினாவின் எண்ணம் பலிக்கவில்லை. ஆட்சியில் தாயின் தலையீட்டை விரும்பாத நீரோ மன்னன் கி.பி.59ம் ஆண்டு அவரைக் கொன்று விட்டான்.

நீரோ மன்னன் தான் தோன்றித்தனமாக ஆட்சியை நடத்தினான். தனது முதல் மனைவி ஆக்டோவியாவைக் கொலை செய்து அவளது தலையைத் தனது ஆசை நாயகி பாபபேயா சபீனாவிற்கு அனுப்பி வைத்தான். நீரோ மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு இவள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. பிறகு அவளும் கொலை செய்யப்பட்டாள்.

ரோம் நகரை கி.பி.64ம் ஆண்டு மிகப் பெரிய தீ விபத்து பற்றி ஆட்டியது. நீரோ மன்னன்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ரோம் நகரமெங்கும் வதந்தி பரவியது. அந்த வதந்தியை மறுத்து அந்த சந்தேகத்தை திசை திருப்புவதற்காக கிறிஸ்தவர்கள் மீது அந்தப் பழியை சுமத்தி ஏராளமான கிறிஸ்தவர்களைக் கொடூரமான முறையில் கொன்றான் நீரோ. அவர்களைக் கம்பத்தில் கட்டி வைத்து தார் பூசி உயிரோடு கொளுத்தினான். இன்னும் பலர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டனர்.

தீக்கிரையான ரோம் நகரை திரும்பவும் உருவாக்க ஏராளமான செல்வந்தர்களைப் படுகொலை செய்து சொத்துக்களைப் பறிமுதல் செய்தான் நீரோ. கி.பி.68ம் ஆண்டு நீரோ மன்னனுக்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டு சென‌ட் இவரை மக்கள் விரோதி என்று அறிவித்து மரண தண்டனை விதித்த போது நீரோ மன்னன் தற்கொலை செய்து கொண்டான்.

Pin It