நீர்ப் பகுதியில் தோன்றிய ஒரு செல் உயிரிகள், நீர்ப் பகுதியில் மட்டுமின்றி நிலப் பகுதியிலும் வாழத் தலைப்பட்டது. அதனால் நீர் நிலத்துள் வாழும் உயிர்கள் தோன்றின. அடுத்து, நில வாழ்வன, நில வாழ்வனவற்றுள் மெல்லுடலிகள், குடலுடலிகள், முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை, குட்டி ஈணுபவை, ஊர்வன, பறப்பன எனத் தோன்றி இறுதியாக குரங்குகள் தோன்றி அவற்றுள் ஓரினம் மனித குரங்காகி, பின்னர் மனிதனாக உருமாற்றம் அடைந்ததே டார்வினின் ‘உயிரினப் பரிணாமத் தோற்றம்’ ஆகும்.

மலைகளிலும், காடுகளிலும் நாடோடியாய் சுற்றி திரிந்த விலங்கினத்தோடு சுற்றி திரிந்த, விலங்குகளோடும் இயற்கையோடு; ஒத்தும் பிறழ்ந்தும் மாறுபட்டும் வாழக் கற்றுக் கொண்டவன் இனக்குழு சமுதாயமாய் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், பிறவற்றின் துன்பத்திலிருந்து தப்பிப் பிழைக்கவுமே இடம் விட்டு இடம் நகரலானான். ஓரிடத்தில் உணவுப் பற்றாக்குறையும், உயிரினங்களுக்குள்ளான மோதலிலுமே தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் தப்பி பிழைக்கவும் நகர்ந்த மானுடனமே நதிகரையோரங்களை அடைந்தான் என்பர். பின்னர் தான் நிலையான குடியிருப்பு, கால்நடை வளர்ப்பு, விவசாய சாகுபடி என இன்று பல்வேறு பரிணாமத்துள் உலக மனித சமூகம் நீண்டு நிற்கிறது.

ஆக அடிப்படையில் காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்த பல குழுக்கள் இடம் விட்டு இடம் நகர்ந்து நதிக்கரையோர வாழ்க்கைக்குள் தம்மை இணைத்துக் கொண்டது என்பது புலனாகிறது. அத்தகைய குழுக்கள் பல்லாயிரக்கணக்கான கி.மீ தூரமோ பயணம் சென்றிருக்க முடியாது. ஏனெனில் சொற்ப உணவுகளும், வழியில் விலங்குகளின் அச்சுறுத்தலும், காடு, மலை, பள்ளத்தாக்குகளை நெடுந்தூரம் வரை செல்ல இயலாது. சுமார் 100 கி.மீ தொடங்கி 500 கி.மீ வரை சென்றிருக்க முடியும். காடுகளிலேயே வசித்தக் குழுக்கள் சில. காடுகளிலிருந்து மலைகளில் வசித்த குழுக்கள். காடுகளிலும், மலைகளிலிருந்து சென்று நதிக்கரையோரம் சென்று நிலையான குடியிருப்பு அமைத்த குழுக்கள் சில. கடற்கரையோரம் சார்ந்த பகுதியில் வாழ்ந்த குழுக்கள் சில. இப்படி ஒவ்வொரு இடங்களிலும் அதற்கேற்றார் போல வாழ்க்கையை அமைத்துக் கொண்ட குழுக்களே தனித்ததொரு பழக்கவழக்கங்களோடு இயற்கையின் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொண்டு வாழ்ந்தனர்.

அதாவது பொதுத் தன்மையான நாடோடியான வாழ்க்கை முறையை தொல்பழங்காலத்தில் தென்னக நிலப்பகுதியில் வாழ்ந்ததற்கான பலச் சான்றுகள் உண்டு. தொல் பழங்கால வாழ்வும், பழைய கற்காலம், சிறிய கற்காலம், புதிய கற்காலம் என ஒவ்வொரு காலத்திய வாழ்க்கை முறை, பொருட்களின் நிலை, ஆகியவற்றினை பல தொல்பொருள் ஆராய்ச்சியின் ஆராய்ந்து வெற்றியும் கண்டுள்ளனர். இன்றும் ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக ஆஸ்திரேலியா, மொரீசியஸ் போன்ற பகுதியினரின் சில பழக்க வழக்கங்களும், அதே போல சிந்து சமவெளி நாகரீகமும் (ஹரப்பா, மொகஞ்சதாரோ) தமிழகத்துள்ள ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சிகள், எகிப்து, கிரேக்கம், ரோம் ஆகியவற்றோடு கொண்டிருந்த உறவு முதல் பயணக் குறிப்புகளின் வழியாகவும், வழிபாட்டு முறையின் வழியாகவும் சில விசயங்களில் ஒத்தத் தன்மையில் மக்களின் வாழ்வு முறை இருந்திருக்கின்றது. பல கல்வெட்டுக்கள், இன்ன பிற சான்றுகள் வழியும் தொன்மைச் சமூகமாக பழந்தமிழகம் விளங்கிற்று என்பர்.

மேற்கூறியது போன்று பல்வேறு வகைப்பட்ட சூழலில் பண்டைய தொல்மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். இவற்றுள் அரசுக் கட்டமைப்பு தோன்றி நிலைபெற்ற பின்னரே சமூகத்தில் பல்வேறு போர்களும், ப10சலும், முரண்பாடுகளும் நிகழ்ந்திருக்கிறது என கருதலாம்.

பண்டைய தமிழகச் சூழலைப் பற்றி திணை அடிப்படையில் பலரும் ஆராய்ந்துள்ளனர்.

“குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இத்திணைப்பகுப்பு உள்@ர் நீர், நில வளச் சூழலுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டதாகும். ஒவ்வொரு திணைக்குமான தனித்த இனக்குழுக்கள் பண்பாடு - நீர் - நிலவளம் போன்றன அந்தந்த திணைக்குரிய உற்பத்தி முறைக்குத் தக்கபடி அமைந்துள்ளன. (அட்டவணை - 1, பக். 157, சங்க காலம் : தொல்லியல் ஆய்வுகள்) மேலும்,

“திணைக் கோட்பாட்டினைப் பொருளியல் பரிணாமத்துடன் அணுக வேண்டுமென அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். மலையும், மலை சார்ந்ததுமான குறிஞ்சித் திணையின் மகக்கள் மெல்லமெல்ல காடுகள் சார்ந்த முல்லைத் திணைக்கு இறங்கி வயல் பரப்பான மருதத் திணைக்கு வந்து வேளாண் தொழிலை மேற்கொண்டனர் என்று பி.டி. சீனிவாச அய்யங்கார் கூறுவார். வேளாண் சமூகமாக மாறிய பின்பு வேட்டைத் தொழிலையும், உணவு சேகரித்தலையும், மெல்ல மெல்ல கைவிட்டுவிட்டனர்.

ஒவ்வொரு திணையையும் ஒவ்வொரு பண்பாட்டுத் தளமாக கருதும் இவர் இவற்றை மானுடவியல் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்பார். குறுநில வட்டமான தமிழகத்தின் திணைப் பிரிவுகளை உலக அளவில் பெருநில வட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். தமிழ் இலக்கியங்களைப் பயின்ற வி.ஆர். இராமச்சந்திரர் தமிழ்ச் சமூக உருவாக்கத்தை நீர்வளத் தன்மையின் பின்னனியில் பார்த்தார். திணைக் கூறுகளைப் பற்றி ஆய்வு செய்த கா. சிவத்தம்பி தனித்த சமூகப் பொருளியல் வளர்ச்சிக் கொண்ட ஒவ்வொரு திணையும் ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றுக்குள் ஒன்று உள்ளுறவு கொண்டும் இருந்தன என்கிறார். ஒரு திணைக்கான சமூக ஒழுங்குடன் மற்றொரு திணைக்கெ மாறி வந்தன என்பார். இத்திணைகளுக்கிடையேயுள்ள சமூக ஒழுங்குகளில் பரிமாற்றத்திற்கு வேளாண் பொருளியல் அடிப்படையாக அமைந்துள்ளது. பாசன வேளாண்மை உற்பத்தி விரிவடையும் போது நீர்வளம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் திணை மயக்கங்கள் உருவாயின. இந்நிலை வேளாண் பெருக்கத்திற்கு வழிகோலியது” (பக். 150 சங்க காலம் : தொல்பொருள் ஆய்வுகள்)

என்று பண்டைய திணைச் சமூகச் சூழலினை பல்வேறு வகையில் விளக்குவர். மேற்கூறப்பட்ட கருத்தியல் யாவும் மார்க்ஸின் சமூகக் கருத்தியலுக்கு உட்பட்டதேயாகும்.

தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை அறிய வட மாவட்டங்களில் பெருமளவு கிடைக்கும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் உதவுகின்றன. புதிய கற்கால வாழ்நிலையிலருந்து இரும்புப் பயன்பாட்டின் மூலம் கால்நடை மேய்ப்பு வேளாண்மைக்கு மாறிய காலத்தின் சமூக அமைப்பு பற்றிய பிரச்சினையை அறிய இதன் மீதான ஆய்வு அவசியமாகும். உலகெங்கும் காணப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களும் ஒப்பிட்டு ஆராயக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை சங்க காலம் என்றழைக்கப்படும் காலப் பகுதியில் முல்லை, குறிஞ்சி, பாலை நிலப்பகுதியில் காணப்பட்டன. மக்;கள் வாழ்வ முறையைப் பற்றி மட்டுமல்லாது நம்பிக்கைகள், சடங்குகள் குறித்ததுமான மானுடவியல் ஆய்வுக்கு இத்தகைய தொல்லியல் தரவுகள் பெருந்துணை புரிகின்றன. ” (சமூக விஞ்ஞானம், மலர் - 6, இதழ் - 21, - சங்க காலம் : தொல் பொருள் ஆய்வுகள். பக். 59)

இனக்குழு வாழ்விற்குப் பின்னர் குழுத் தலைமைகள் தொடர்ச்சியான வளர்நிலைக்கு சென்றதை சங்க இலக்கியங்களில் காண முடியும். அக்காலத்தில் கிழார், வேளிர், மன்னன், அரசர், வேந்தன் என்ற அதிகாரப் படிநிலைகளை காண முடிகிறது. இவர்களுக்குள் உண்டான மோதல்களையும், ப10சல்களையும் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது.

மன்னர் உடைமை சமூகத்தின் வளர்ச்சி நிலையில் நிலப்பகுதிகள் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டிருக்கிறது.

“தமிழகத்தின் ஒரு பகுதியான தொண்டைமண்டலம், கோட்டம், நாடு, ஊர் என்னும் பிரிவுகளைப் பெற்றிருந்தது. சோழ மண்டலம், வளநாடு, ஊர் என்ற பிரிவுகளைப் பெற்றிருந்தது. வளநாடு அல்லது கோட்டம் என்பது இக்கால மாவட்டம் போன்றது என்றும், நாடு அல்லது கூற்றம் என்பது இக்காலத்துத் தாலுக்காவைப் போன்றது என்றும், மண்டலம் என்பது இக்கால மாகாணம் போன்றது என்றும் கொள்ளலாம்” என்பார். (பக். 71, மா. இராசமாணிக்கனார், கல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும்)

புலவர்கள் நேரடியாக இலக்கியம் படைக்காது மன்னர்களைப் பற்றி, புகழ்ந்துரைக்கும் சூழலில், இயற்கை, சமூகம் சார்ந்த கருத்தினை எடுத்துரைக்கும் போது உவமை, உள்ளுறை, வருணனை போன்றவற்றின் வழியாகவே பெரும்பகுதி எடுத்துரைத்ததை அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் நிலப் பெயர்கள் பற்றி குறிப்பிடுவது அன்றி, அரசுக் கட்டமைப்பு நன்கு வேறூன்றிய கட்டமைப்பு முறையை அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு குலத்தவரின் நிலையையும் சுட்டிச் செல்வதை காண முடிகிறது.

அரசன் - நாட்டைப் பாதுகாத்தல்
அந்தணன் - கல்வி, தூது செல்லும் உரிமையுடையோர்
வணிகன் - வணிகஞ் செய்தல், தினை விளைவித்தல்,
படைக்கலன்களை பாதுகாத்தல்
மன்னனின் ஏவல் வழி செல்லுதல்.
வேளாளன் - உழவுத் தொழில், திணை விளைவித்தல்
படைக்கலன்களை பாதுகாத்தல்
மன்னனின் ஏவல் வழி செல்லுதல்.

ஆகிய தொழில் முறைகளாக உழைத்து பொருளுற்பத்தியில் ஈடுபடுவதோ மற்றும் உணவுக்கான தேவையின் அடிப்படையில் இயற்கையோடு போராடும் தொழிலோ அன்றி நாட்டைத் தனிநபர் கட்டுக்குள் கொண்டு வந்ததையும், மைய அரசினை நிறுவி பெருநிலப் பகுதிகளை ஆண்டதையும், போரின் மூலம் நாட்டைக் கைப்பற்றியதையும் சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் உணர்த்துகின்றன.

சங்க காலம் என்பது அடிப்படையில் இனக்குழு சமூகத்தினை தம் கட்டுப்பாட்டுக்குள் நிறுத்தி, மன்னர் உடைமைச் சமூகம் வளர்ச்சிப் பெற்ற காலமாய் நிலவுடைமைச் சமூகத்தின் முழு நிலையையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

4-வகை மக்கள்

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் - ஆவர்.

அந்தணர்
அந்தணர் என்ற சொல்லுக்கு குணசீலன், பெரியோன், செந்தண்மையுடையவன் - என்று பொருளுரைக்கப்படுகின்றது.

அந்தணர் பாடி - மறவர் குடியிருக்கும் இடம்

‘அந்தணன்’ என்ற சொல்லுக்கு அந்தணன் : தண் - குளிர்ச்சி பொருந்திய் குளிர்ச்சி பொருந்திய தூய்மையுடையவன்;

“அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை ப10ண்டொ ழுகலான்” (குறள். பா.)

என்ற கருத்தின் அடிப்படையில் தூய்மை நிலையில் வாழக் கூடிய, மற்ற மனிதர்கள் வாழக் கூடிய நிலை யில்லாது, தாம் உயிர் வாழ்வதற்குரிய உணவும், சில அடிப்படைத் தேவைகளையும் ப10ர்த்தி செய்து கொண்டு நாடோடி போலவும், வாழும் வாழ்க்கை உடையோரே ‘அந்தணர்’ என்று கருதப்படுகிறது.

தொல்காப்பியத்தில்,

“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” (தொல். பொருள். அகத் நூ. 28) என்ற பாடல், “உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான்” (மே. நூ. 36) வேண்டிய கல்வியாண்டு மூன் றிறவாது (மே. நூ. கற்பி. நூ. 186) “அந்தணாளர்க் கரசுவரை வின்றே” (மே. நூ. மரபு. நூ. 627) “நூலே கரகம் முக்கோல் மனையே ஆயுங் காலை அந்தணர்க்குரிய” (மே. நூ. மரப. நூ. 615) ஆகிய நூற்பாக்களின் வழியே முறைப்படி.

1. ஓதல் (கல்வி) தூது ஆகிய தொழிலை உடையோராகவும்,
2. ஒழுக்கமே பொருளாகக் கொண்டு வாழ்வர்.
3. கல்வி காரணமாக 3 ஆண்டுகள் பிரிவு நிகழும் என்பதும்,
4. அரசியலில் கால் பதித்தலையும் விலக்கப்படாது என்பதும்,
5. நூல், கரகம், முக்கோல், மனை - ஆகிய பொருட்கள் அவர்கட்கே உரித்தான பொருள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசர்

அரசர், சிற்றரசர், மன்னர், வேந்தர் என பலவாறு அழைக்கப் பெறுகிறது.

அரசு - ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட மன்னனின் கட்டுப்பாட்டிலோ இயங்குவது.
பேரரசு - பெரிய நிலப்பரப்புக்களை ஆட்சி பரப்பாக கொண்டது.
சிற்றரசு - குறிப்பிட்ட சில நிலப்பிரபுக்களை ஆட்சி எல்லையாகக் கொண்டது.

தொல்காப்பியத்தில், தொல் காப்பிய பொருளதிகார நூற்பாக்களில்,

“தானே சேறலும் தண்ணொடு சிவணி ஃ ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே (மே. நூ. அகத். நூ. 29) படையும் கொடியும் குடியும் முரசு ஃ நடைநவில் புரவியும் களிறுந் தேறும் ஃ தாரும் முடியும் நேர்வன பிறவும் ஃ தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய (மே. நூ. மரபு. நூ. 616) என்ற நூற்பாக்களின் வழியாக, வேந்தன் தானே செல்லுதல், பிறருடனும் செல்லுதல் (உலா. போர் இன்ன பிற) படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பதும் வேந்தர்க்குரிய பொருட்களாகவும் சுட்டி செல்கிறது. ஆக நாட்டைப் பாதுகாத்தல், வழிநடத்துதல், ஆளுமை செலுத்துதல் அரசனின் தொழில் என சுட்டிச் செல்லும்.

வணிகர்

வணிகன் என்ற சொல்லுக்கு செட்டு; வியாபாரம், செய்பவன், வியாபாரி என்று பொருள் உரைக்கப்படுகின்றது.

வணிகரின் 6 வகை தொழில்கள்

ஓதல், வேட்டல், ஈட்டல், உழவு, நிரையோம்பல், வணிகம் ஆகிய தொழிலை உடையவராக தொல்காப்பியம் வெளிப்படுத்துகிறது. “வைசிகன் பெறுமே வணிக வாழ்க்கை (மே.நூ. மரபு. நூ. 62) மெய்திரி வகையின் எண்வகை உணவின் செய்தி வரையார் அப்பாலான” (மே. நூ. மரபு. நூ. 623) கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே” (மே. நூ. மரபு. நூ. 624) என்ற நூற்பாக்களின் வழியாக,

1. வாணிப வாழ்க்கையை மேற்கொள்பவராகவும்,
2. எண்வகை உணவான நெல், காணம், வரகு, சிறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதுமை (புலிய10ர் கேசிகன். 451) ஆகியவற்றை விளைத்தலும்.
3. கண்ணி (மாலை) தார், ஆகிய பொருட்களுக்கு உரியவராகவும் சுட்டப் பெறுகிறது.

வேளாளர்

வெள்ளத்தை ஆள்பவர் : அதாவது நீரை ஆள்பவர் என்பவர். உழுவித்து உண்டோன் வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள், மன்னரின் ஏவல் வழி இயங்குபவர்கள். தொல்காப்பியத்தில்,

“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிய பிறவகை நிகழ்ச்சி” (மே.நூ. மரபு. நூ. 625)
உழுதூண் வாழ்க்கையே அவர்கள் வாழ்வு என்று பிறவகை நிகழ்ச்சி ஏதுமில்லை என்றும் பகர்கிறது. இவர்களுக்கு உரிய பொருட்களாக,

“வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்
வாய்ந்தன ரென்ப விவர்பெறு பொருளே” (மே.நூ. மரபு. நூ. 626)
என்று வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினாளே, படையும், கண்ணியும், வேளாண் மாந்தர்க்குரிய பொருட்களாகவும் சுட்டிச் செல்கிறது.

மேலும், வணிகர், வேளாளர் ஆகிய இருவரும் வேந்தனின் ஏவல் வழி இயங்கக் கூடியவர்கள் என்பதையும்,

“அன்னராயினும் இழிந்தோர்க் கில்லை” (மே. நூ. மரபு. நூ. 629) என்ற அடியின் வழி வணிகர், வேளாளரிலேயே இழிந்தோராகக் கருதப்பட்ட சிலருக்கு மேற்கூறப்பட்ட தகுதிகள் இல்லை என்பதையும் தெளிவாக தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது. இவற்றுள் சில நூற்பாக்கள் இடைச்செருகல் என கூறுவது ஆய்விற்குரியதாகும்.

துணை நூற்பட்டியல்

1. அரசியல் பொருளாதாரம், லெவ் லியோன்டியெவ், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ - 1975.
2. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, தமிழ்ப் பல்கலைக் கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர் - 2008.
3. சங்க காலம் - தொல்லியல் ஆய்வுகள் (சமூக விஞ்ஞான மலர்)

- முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம்