Aurora_370அரோரா என்பது வடதுருவமான ஆர்க்டிக் மற்றும் தென்துருவ அண்டார்க்டிக் பகுதிகளில் ஏற்படும் இயற்கை ஒளியாகும். அரோரா என்பது ரோமனியர்களின் விடிகாலை பெண் கடவுளின் பெயராகும். கிரேக்கத்தில் போரியஸ் (Boreas) என்பது வடக்கு காற்று என்று பொருளாகும். இரண்டையும் இணைத்து வடதுருவத்தில் தெரியும் அசையும் வண்ண ஒளிக்கு பெயர் சூட்டி யுள்ளனர். இது புவியின் 60 டிகிரி அட்சரேகைக்கு மேலும், வானின் வளிமண்டலத் தில் மிக உயரத்தில் 80 கி.மி உயரத்துக்கு மேல் உள்ள வெப்பகோளத்தில் அழகான வண்ணத் திரையாக காட்சி அளிக்கிறது. புவியின் காந்தப் பரப்பி லிருந்து புறப்பட்ட மின்னூட்டம் பெறப்பட்ட துகள்களான ஆக்சிஜன் மற்றும் நைட்டிரஜன் அயனிகள், சூரியக் காற்றுடன் மோதும்போது வானில் வண்ணங்கள் தொடர்ந்து உண்டாகின்றன. இது பார்ப்பதற்கு வண்ணத் திரைகளைத் தொங்கவிட்டது போலிருக்கும். அவை அசையவும் செய்யும். இந்த வண்ண ஒளிப்பரப்பு பகலிலும் கூட நடக்கிறது. இரவில் இந்த ஒளியில் அமர்ந்து புத்தகம்/நாளிதழ் கூட படிக்கலாம்.

Aurora_1_370ஆர்க்டிக்கில் தெரியும் வண்ணத் திரைக்கு அரோரா போரியாலிஸ் (Aurora borealis) என்றும், அண்டார்க்டிக்கில் தோன்றும் வானின் வண்ண ஒளி ஆட்டத்திற்கு, அரோரா ஆஸ்த்திரேலிஸ் (Aurora australis) என்றும் பெயர். இந்த ஒளிகள் பெரும்பாலும் அழகான பச்சை, வயலெட், சிவப்பு வண்ணத்தில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் காட்சி அளிக்கும். ஆக்சிஜனின் மின் னூட்டம் பெற்ற துகள் இருந்தால் அது பச்சை/பழுப்பு கலந்த சிவப்பாகவும், நைட்டிரஜன் துகள் எனில் நீளம்/ சிவப்பாக காட்சி தரும். அப்பகுதி மக்களால் இந்த ஒளிகள், கடவுளின் சமிக்ஞைகள் என்று நம்பப்படுகின்றன. அவற்றின் நிறங்கள் கணத்தில் மறைந்து மாறி அற்புதமாய் தெரியும். இந்த அற்புதத்தைக் காண கனடாவின் கடற்கரைக்கு மக்கள் பயணம் வருகின்றனர். இந்த அரோரா தெற்கே அன்டார்க்டிக்கா, தென் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவிலும் தெரியும்.

Pin It