முதலாண்மைப் பொருளாதாரம், அதன் விளைவாகத் தொடர்ந்து பெருகும் நுகர்வு ஆகியவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் அதன் கடுமையான தீய விளைவுகளை நாம் விரைவில் எதிர்கொள்ள வேண்டும். இது தொடர்பான சில அண்மைச் செய்திகளின் தொகுப்பு.

------------

bird in australia fire2019 செப்டம்பர் முதல் ஆச்த்ரேலியாவில் எரிந்து வரும் காட்டுத் தீ சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் ஏக்கர் பரப்புள்ள காடுகளைப் பொசுக்கியுள்ளது. 25 பேர் உயிரிழந்துள்ளனர். நூறு கோடிக்கும் அதிகமான விலங்குகளும் பல வகையான மரங்களும் பிற புதலிகளும் ('தாவரங்கள்') கருகிச் செத்துள்ளன. இந்தத் தீயின் கடுமையால் பல பகுதிகளில் சூழல் மாறியிருக்கிறது.

https://truthout.org/articles/1-billion-animals-killed-in-australia-wildfires-is-very-conservative-estimate/

---------
இந்தியா ஆண்டுதோறும் சுமார் 946 கோடி கிலோ நெகிழிக் கழிவுகளை உருவாக்குகிறது. இதில் நாற்பது விழுக்காடு சேகரிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டு (2020-இல்) நெகிழிப் பயன்பாடு 2000 கோடி கிலோவைத் தாண்டி விடும் என்று அஞ்சப்படுகிறது.

2014 சூன் முதல் 2019 மார்ச் வரையான இடைவெளியில் இந்திய அரசு இயற்கைக் காடுகளில் ஒரு கோடியே பதினெட்டு லட்சத்து முப்பதாயிரம் மரங்களை வெட்டுவதற்கு ஆணையிட்டது (அல்லது அனுமதித்தது). அவற்றுக்கு ஈடு செய்தல் எனும் பெயரில் ஒரு கோடி மரக் கன்றுகளை நட்டது; ஆனால், அவற்றில் பல ஓரினப் பயிர்கள், உயிரினப் பன்மயத்துக்கு அவற்றால் குறிப்பிடத்தக்க பயனில்லை.

https://www.indiaspend.com/how-india-managed-its-forests-water-waste-in-2019/
---------

அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

1) அம்மோனியா பாஃச்பேட், யூரியா உள்ளிட்ட செயற்கை உரங்களையும் 'பூச்சி மருந்து' என்று நாம் தவறாகக் குறிப்பிடும் உயிர்க் கொல்லிகளையும் வேளாண்மையில் பயன்படுத்துதல்;

2)காடுகளை அழித்தல் அல்லது காடுகளில் சாலை, வேலி, கட்டடங்கள் ஆகியவற்றை அமைத்துக் காடுகளைத் துண்டாடுதல்;

3) ஒலி, ஒளி மாசு உண்டாக்குதல் (எ.கா. தேவையில்லாமல் விளக்கெரித்தல்);

4) ஓரிடத்தின் சூழலுக்கு ஒவ்வாத உயிரினங்களை வேறிடங்களில் இருந்து கொணர்ந்து வளர்த்தல்;

5) நீர் நிலைகளில் அளவுக்கதிகமாக மீன் பிடித்து அவற்றின் எண்ணிக்கையையும் வகைகளையும் பெருமளவு குறைத்தல்;

6) போக்குவரத்து, மின் சாதனங்கள், வீடுகள், உடைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வரம்பற்ற நுகர்வு காரணமாக நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தையும் தொடர்ந்து மாசுபடுத்துதல்;

இவற்றின் விளைவாக உலகளவில் பூச்சி இனங்களும் விலங்கு, புதலி ('தாவர') வகைகளும் மிக வேகமாக அழிந்து வருகின்றன. பூச்சி வகைகளில் 40%-க்கும் மேற்பட்டவற்றின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது; மூன்றில் ஒரு பங்கு பூச்சியினங்கள் அழியுந் தருவாயில் உள்ளன.

https://www.theguardian.com/environment/2020/jan/06/urgent-new-roadmap-to-recovery-could-reverse-insect-apocalypse-aoe

- பரிதி

Pin It