"நீ அந்த நடிகையின் படத்தத்தானே பார்த்திருக்கே, நான் தொட்டே பார்த்திருக்கேன் தெரியுமா''.

hyptography_320அதெப்படி, கும்பகோணத்தில இருக்கிற கோபால், பாவுலிட் நடிகையைத் தொட்டிருக்க முடியும். அதற்குத்தான் வந்திருக்கிறது ஹேப்டோ கிராஃபி. லாஸேஞ்சலிஸில் இருக்கும் பேரக்குழந்தையின் விரலை லால்குடியிலிருந்தபடியே தாத்தா தொட்டுப் பார்த்து ஆசையைத் தீர்த்துக்கலாம். நீங்கள் பார்த்ததை இன்னொருவரும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள், பிரச்சனையில்லை மோபைல் கேமராவே போதும். படம் எடுத்து காட்டிவிடலாம். நீங்கள் தொட்டு அனுபவித்ததை இன்னொருவரிடமும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள், இப்போது போட்டோ கிராஃபி போல ஹேப்டோகிராஃபி வந்திருக்கிறது. (படம். குச்சன்பெக்கர்.ஹேப்டோகிராஃபிநிபுனர். இவரின் கீழ் 50 மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள்.)

நமக்கு இருவித தொடு உணர்ச்சிகள் இருக்கின்றன. டேக்டைல் உணர்ச்சிகள் சருமம் மூலம் அறியும் சுற சுறப்பு, வழுவழுப்பு, அழுத்தம், நழுவுதல், அதிர்வுகள், சூடு, குளிர் முதலியன. இன்னொரு உணர்ச்சி கைனீஸ்த்தடிக் உணர்ச்சி. மூட்டுகளின் பொசிஷன், உடம்பின் அசைவுகள், தள்ளு வேகம் போன்றவை.

செயற்கையாக காட்சிகள், வாசனைகள், சுவைகள், ஒலிகள் முதலியவற்றை கம்ப்யூட்டரால் உருவாக்க முடிகிறது. தொடு உணர்ச்சியையும் உருவாக்கினால் என்ன. ஹேப்டிக் டெக்னாலஜி அது பற்றியதுதான். இப்போதே உங்கள் மோபைல் ஃபோனில் வைப்ரேஷன் மூலம் கொஞ்சம் தொடு உணர்ச்சியை உணர்கிறீர்கள். சீக்கிரமே சகல தொடு உணர்வுகளையும் உற்பத்தி செய்யும் பரப்புகள் வந்துவிடும்.

hyptography---micheal-imageகை, விரல் போன்ற செயற்கை உறுப்புகள் நிஜமான தொடு உணர்வை உங்கள் கைகளுக்குத் தரும். இனி ஃப்ளையிங் கிஸ் தேவையில்லை, மொபைல் ஃபோனை கன்னத்தில் வைத்தால் நிஜமான முத்தம் அதே உயிரூட்டத்துடன் கிடைக்கும். எதையும் தோடாமலே தொட்டது போன்ற உணர்ச்சிகள் கிடைக்கும். காற்றின் அதிர்வுகளே உங்கள் உடம்பில் தொட்டுத் தழுவிய உணர்ச்சியை வழங்கும்.

மூளையில் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி இடங்கள் உண்டு. இதில் மிக அதிமான இடம் காட்சிக்கும் தொடு உணர்ச்சிக்கும்தான். வாசனை, சுவை, சப்தம் ஆகியவற்றிற்கு கொஞ்சம் இடம்தான் தரப்பட்டுள்ளது. இப்படியிருக்க ஏன் தொடு உணர்ச்சியை நாம் செயற்கையாக இத்தனைநாள் உருவாக்காமல் இருந்தோம் என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள். (படம். டேவிட். சிற்பி- மைக்கெலாஞ்சலோ)

hyptography---monolisha_320எந்த பரப்பின் உணர்ச்சியை சித்தரிக்க வேண்டுமோ அந்த பரப்பின் மீது பேனா போன்ற கருவியை தேய்த்தால், அதில் ஏற்படும் தொடு உணர்ச்சிகள் கம்ப்யூட்டரில் டிஜிட்டலாக பதிவாகிவிடும். அந்த உணர்ச்சியை அதே தண்மையில் விரும்பிய பொருளில் செலுத்தலாம். (படம்: மோனாலிசா. ஓவியர்-லியனார்டோடா வின்சி)

ஹேப்டோ கிராஃபி வெறும் வேடிக்கைப் பொருளல்ல. சும்மா உங்களை உசுப்பேத்தத்தான் ஜன ரஞ்சகமான விஷயங்களைப் பற்றி சொன்னேன். இதன் உண்மையான அப்ளிகேஷன்களைக் கேட்டால் அசந்துவிடுவீர்கள்.

ஆன் லைன் ஷாப்பிங் செய்கிறீர்கள், வாங்கும் புடவை, உள்ளாடைகள், எலெக்டரானிக் பொருள்களை வீட்லிருந்தே தொட்டுப் பார்க்கலாம். தொடாதே என்ற எச்சரிக்கையை அரும்பொருள் காட்சியகங்களில் பார்க்க முடியாது. விர்ச்சுவல் பிம்பங்களைத் தொட்டு அனுபவிக்கலாம். முற்காலச் சோழர்களின் ஐம்பொன் சிலைகளை உச்சி முதல் உள்ளங்கால் வரை தொட்டு ரசிக்கலாம்.

ஹேப்டிக் கையுறைகள், முழங்கை உறைகள் இன்னம் இதுபோன்ற உடல் உறுப்புகளுக்கான உறைகள் உள்ளன. இவற்றை விளையாட்டு பழகுபவர்கள் அணிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டரில் விரும்பிய ஸ்போர்ட்ஸை தொடங்கிவைத்தால், ஒரு கோச் எப்படி கைகளை, கால்களைப் பிடித்து கற்றுத் தருவாரோ அதுபோல சொல்−த்தரும். உடம்பில் அணிந்த உறைகள் கோச் பிடிப்பது போலவே பிடித்து எப்படி அசைக்க வேண்டும் என்று செய்யும். பரத நாட்டியம், டிஸ்கோ, ஹிப் ஹாப் எந்த நடனமாக இருந்தாலும வீட்டிலிருந்தே செய்யலாம்.

மருத்துவ மாணவர்கள் நோயாளிகளை எப்படி கையாளவேண்டும், நுட்பமான சர்ஜரிகளை செய்யும் உணர்ச்சிகளை வழங்கி வெட்டுவது, தைப்பது, போன்ற வேலைகளை செய்து செய்து பழகலாம். சொத்தைப் பல்லை பல் மருத்துவ கருவிகளின் உதவியால் எப்படி கண்டுபிடிப்பது போன்ற பயிற்சிகளை வகுப்பறைகளிலேயே வழங்க முடியும்.

நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? கோயம்புத்தூர் பீளமேட்டிலிருந்து அங்குலம் கூட நகராமல் பிரெஞ்ச் லூவ்ர் மியூசியத்தில் உள்ள மோனாலிசாவைத் தொடுவேன், இத்தாலியில் ஃப்ளாரென்சில் மைக்கெலாஞ்சலோவின் டேவிட் சிலையைத் தொட்டு மகிழ்வேன்.

- முழுமை அறிவியல். மணி.

Pin It