houseஉமாவுக்கு மூன்று வயதில் வீட்டின் முற்றத்தில் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டியது இன்றும் நினைவுக்கு வருகிறது. அவளுக்கு எட்டு வயது நிரம்பியபோது அதே வீடு முற்றிலும் மாறியிருந்தது. வீடு முழுவதும் அம்மாவின் தட்டு முட்டு சாமான்கள் நிரம்பியிருந்தன. நடக்கக்கூட இடமில்லாதபோது எங்கே விளையாடுவது?

இப்போது உமாவுக்கு 23 வயது. அவளது வீட்டை நினைத்தால் அவளுக்கே வெட்கக் கேடாக இருக்கிறது. ஒரு இடம் விடாமல் வீடு முழுவதிலும் அம்மா சேகரித்து வைத்திருக்கும் சாமான்கள் நிரம்பியிருக்கின்றன. பின்னால் உள்ள பாத்ரூமுக்குப் போக வழியில்லாததால் அவளது அப்பா போர்ட்டபுள் யூரின் டப் வாங்கி பயன்படுத்துகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகுதான் உமாவுக்கு விளங்கியது, அவளது அம்மா பொருள்களை சேகரிக்கும் மனநோய் உள்ளவள் என்பது.

பொதுவாக நாம் பழைய படங்கள், செய்தித்தாள்கள், பழைய விளையாட்டுச் சாமான்கள், போன்றவற்றை பழைய நினைவுப் பொருள்களாக பத்திரப்படுத்தி வைப்பதுண்டு. அதில் தப்பேதுமில்லை, ஆனால் வீடு முழுவதும் குப்பைகளாக நிரப்பி வைத்துக்கொள்வது ஒரு வகை மனநோய் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

-     முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It