மது போதையில் மூழ்கியவரும் செக்ஸ் போதையில் மூழ்கியவரும் மீள்வது கடினம். உண்மை நிலை இப்படியிருக்கும்போது செக்ஸ் போதையை அதிகரிக்க மதுபோதை உதவுவதாக கருதுவது அறியாமை.
போதைப் பழக்கம் காலம்காலமாய் நீடிக்கிற ஓர் சமூகக்கேடு. மவுரியர்கள் காலத்தில் பலவித போதையூட்டும் பானங்களும் போதையற்ற பானங்களும் நிரம்பி வழிந்துள்ளன. ஏராளமான மக்கள் மதுபானங்களை பெருமளவு பருகியதால் அரசாங்கமே சாராயத் தொழிலைத் தொடங்குவதற்கு இட்டுச் சென்றது என்று கவுடில்யரின் அரத்தசாஸ்திரம் கூறுகிறது.
போதையை உட்கொண்டால் செக்ஸ் உறவுநேரம் அதிகரிக்கும் என்ற தவறான கருத்துடன் பலரும் போதையில் ஈடுபடுகிறார்கள். போதைக்கும் செக்ஸ்க்கும் சம்பந்தமில்லை. அதுமட்டுமல்ல தொடர்ந்து போதைப்பழக்கம் நீடித்தால் விந்தணுக்கள் குறையும், வீரியம் குறையும், முழுமையான ஆண்மைக் குறைவில் போய் முடியும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
போதையும் செக்சும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பாலியல்