ஆகாரத்திற்கு வழியில்லாமல் பட்டினி கிடக்க வேண்டிய நேரங்களில் செல்கள் அவற்றிற்குள்ளேயே இருக்கும் புரதங்களை ஜீரணம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றன. தாவர செல்களில் இப்படி ஒரு செயல் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை; மிருக செல்களில் ஆட்டோ "ஃபேகோசோம்'' என்ற ஒரு சிறு பை போன்ற உறுப்பு பட்டினி காலங்களில் சுற்றியிருக்கும் புரதங்களைப் பிடித்து பையில் போட்டுக்கொள்கிறது. பின் லைசோசோம் எனும் தற்கொலை உறுப்புடன் இணைந்து சேகரித்த புரதங்களை செரிமானம் செய்து வேண்டிய சக்தியை செல்களுக்கு வழங்குகிறது.

பசி வந்தால் தன் உறுப்பையே வெட்டி சாப்பிடுவது போன்றது இந்தக் காரியம். பசி இல்லாதபோது இந்த உறுப்பு செல்லுக்குள் வேண்டாது திரிந்துகொண்டிருக்கும் புரதங்களையும் சரிவர முதிர்ச்சியடையாமல் அரைகுறையாக உண்டாக்கப்பட்ட புரதங்களையும் பிடித்து அழிக்கும் வேலையை செய்கிறது.

நரம்பியல் சம்மந்தமான நோய்களாகிய பார்க்கின்சன் தள்ளாட்ட நோய் கேன்சர் மற்றும் அல்ஷெய்மர் மறதி நோய் போன்றவை மனிதருக்கு வயோதிகத்தில் ஏற்படுவதற்குக் காரணம் ஆட்டோஃபேகோசோம் சரியாக வேலை செய்யாமல் கிடப்பதுதான்.

செல்லில் ஆக்கல் தொழில் எப்படி முக்கியமோ அதுபோல் அழித்தல் தொழிலும் மிக மிக முக்கியம் என்று தெரிகிறது.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It