“நதிக்கரையில் பிறந்ததாம்

              நாகரிகம்

              நதிக்கரையில் பிறந்துமா

              இத்தனை அழுக்கு?”

கவிஞர் வைரமுத்துவின் கவலை தோய்ந்த கேள்வி இது. நவீன கல்வி, கலாச்சாரம், நாகரிகம் மூலம் மனித சமுதாயத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் தண்டனையே ‘LIFE STYE DISEASES’ வாழ்க்கை மாற்ற நோய்கள்.

       எந்த ஒரு மாற்றமும் முன்பிருந்த நிலையை விட ஒரு படியேனும் உயர்ந்ததாய், முன்னேற்றமாய் இருக்க வேண்டும். ஆனால் மனித வாழ்வியல் மாற்றங்கள் நோய்களைப் பரிசாய் தந்துள்ளன. அறிவியலும், மருத்துவத் துறையும் வியக்கத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருக்கும் போது உயிருக்கு உலை வைக்கும் நோய்களின் எண்ணிக்கையும் பெருகியிருப்பது வேதனையான முரண்பாடு.

       கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் பெரும்பாலான நாடுகளின் நிலை இதுதான். ஆனாலும் எந்த நாடுகளும் வாழ்க்கை மாற்ற நோய்களை முறியடிக்க முழு மூச்சிலான நடவடிக்கைகள் எடுக்கவோ, நிதி ஒதுக்கீடு செய்யவோ இல்லை.

       1900 ஆம் ஆண்டில் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட மரணங்களுக்கு மூன்று முக்கிய தொற்றுறோய் காரணங்கள் கண்டறியப்பட்டன. அவை 1.நிமோனியா 2.டி.பி. 3.வயிற்றுப்போக்கு.

       40 ஆண்டுகளுக்குப் பின்னர் 1940 ஆம் ஆண்டில் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட மரணங்களுக்கான அடிப்படைக் காரணங்களால் வாழ்க்கை முறை மாற்ற நோய்கள் முன்னுக்கு வந்தன. இவற்றில் இருதய நோய்களும், புற்றுநோய்களும் முதன்மை இடம் பெற்றன.

       1990 ஆம் ஆண்டில் வாழ்க்கை மாற்ற நோய்களே 60 சதவீத மரணங்களுக்கான முக்கிய காரணங்கள் என அமெரிக்கா அறிவித்தது.

       இந்தியாவில் முந்தைய தலைமுறைகளில் 40,45 வயதுகளுக்குப் பின் வந்த நோய்கள் இப்போதைய தலைமுறையில் 25,30 வயதுகளில் வந்து விடுகிறது. அறிவும், அறிவியலும், மருத்துவ விஞ்ஞானமும் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்து வரும் போது இளம் தலைமுறை மீது நோய்கள் போர்தொடுப்பது ஏன்? காலம் எழுப்பும் கேள்வி இது

இனிப்பு நோய்...கசப்பான நிலை

       இந்தியா உலகளவில் சர்க்கரை நோயாளி கள் அதிகமுள்ள முதல் நாடாக, உலக சர்க்கரை நோய் நாடுகளின் தலைநகரமாக (Diabetic Capital of the world) ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் 3 கோடி மக்கள் சர்க்கரை நோயாளிகளாக)உள்ளனர். 15 வயதுக்கு மேற்பட்ட மக்களில் நகர்ப்புறங்களில் 11 சதவீதத்தினரும், கிராமப்புறங்களில் 3 சதவீதத்தினரும் நீரழிவின் பிடிக்குள் நிற்கின்றனர். 2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியாக உயரும் அபாயம் உள்ளது என்று உலக நல நிறுவனம் (W.H.O) எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. “DIABETIC MELITUS IS A TIME BOMB” IS A TIME BOMB“ என்று மருத்துவ விஞ்ஞானி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 

முடக்கிப் போடும் உடல்பருமன்

       உடல் பருமன் பல வியாதிகளின் உற்பத்திக் கேந்திரம் குறிப் பாக உடல் பருமனால் இரு தய நோய்கள் ஆபத்து மூன்று மடங்கு அதிக மாகிறது. இந் திய ஆண்களில் 58 சதவீதத்தின ரிடமும் பெண் களில் 75 சத வீதத்தினரிட மும் அதிகளவு தொந்தியும் பருமனும் காணப்படுகிறது என்கின் றன ஆய்வுகள்.

       இந்தியா, சீனா, ஜப்பான் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆண்களின் (வயது வந்தவர்களில்) இருப்பளவு 33.5 அங்குலத்திற்துக் குறைவாகவும், பெண்களில் 35.4 அங்குலத்திற்குக் குறைவாகவும் இருந்தால் உடல் பருமனோ, பரும னோடு தொடர்புள்ள கடுமையான நோய்களோ ஏற்படாது என்கிறது மற்றொரு ஆய்வு.

முதல்பெரும் ஆட்கொல்லிநோயால் மாறிவிடும் இதயநோய்கள்

       10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் நிர்வாகப் பிரிவுகளில் பணிபுரிவோரில் 17.5 சதவீதத்தினரிடமும் காணப்பட்ட மாரடைப்பு தற்போது 35 சதவீதமாக இருமடங்காக உயர்ந்துள்ளது. 10 இந்தியரில் ஒருவர் மாரடைப்பு நோயில் மரணமடைகிறார். சுமார் 1 கோடி இந்தியர்கள் இதயநோயாளிகளாகக் கணக்கிடப் பட்டுள்ளனர். இதய நோய்களைப் பொறுத்தள வில் இந்தியாவில் 10 சதம் மக்களும், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தலா 7 சதம் மக்களும்,

சீனாவில் 4 சதம் மக்களும் பாதிக்கப்பட்டிருப் பதாக உலக நல நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ன் ஓர் முக்கிய எச்சரிக்கை இதோ, 201க்குள் இந்தியாவில் இதயநோய்கள்தான் முதல் பெரும் கொலைகார நோயாக இருக்கும்.

கொலஸ்டிரால், ரத்தஅழுத்தம், மனஅழுத்தம் - மெல்லக் கொல்லும் 3 நோய்கள்

       நகர்ப்புற இந்திய மக்களில் 40 சதத்திற்கும் அதிகமானோரிடம் ரத்த கொலஸ்டிரால் அளவுகள் (LIPID LEVELS) உயர்ந்து காணப்படு கின்றன (இருதய நோய்களுக்கான முக்கியக் காரணி இதுவே) 1 கோடிக்கும் அதிகமான இந்தியர்களிடம் உயர்ரத்த அழுத்தம் உள்ளது. பணியாளர்களில் இரண்டில் ஒருவருக்கு மனஅழுத்த நோய் உள்ளது.

நவநாகரிக வாழ்க்கையின் மரணப்பரிசு - புற்று நோய்கள்

       150க்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் காணப்படுகின்றன. புற்றுநோயின் தாக்குதல் ஒருபுறமும் ஆங்கில மருத்துவச் சிகிச்சையின் தாக்குதல் மறுபுறமும் மனித உயிர்களைச் சிதைத்துச் சீரழித்த வருகின்றன. தற்போதைய சூழலில் ஆண்களிடமும் பெண்களிடமும் காணப்படும் முக்கியமான 5 புற்றுநோய்களின் பட்டியல் இதோ. முடியாததே!

       மருத்துவ உலகம் சுட்டிக்காட்டும் பிரதான காரணம் ‘உழைப்பற்ற வாழ்க்கைமுறை’ (Sedentary Life Style) எல்லாவிதத்திலும் உடலுழைப்பு, உடலி யக்க செயற்பாடுகள், உடற்பயிற்சிகள் குறைந்து விட்டன. (Lake of physical activities and exercises)

       உணவுப் பழக்கங்களிலும் பாய்ச்சலான பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. என்ன உண்கிறோம்? எதற்காக உண்கிறோம்? என்ற தெளிவும், விழிப்புணர்வும் இல்லாமல் ஆரோக்கி யத்தைச் சீர்குலைக்கும் துரித உணவுக் கலா சாரத்தில் கரைந்து வருகிறோம். பயறுவகைகள், நவதானிய வகைகள், காய்கனிகள், கீரைகள், போன்ற அன்றாடம் உண்ண வேண்டிய உணவுப் பொருட்களின் பயன்பாடு குறைந்து, அரிசி,

எண்ணெய், இனிப்பு ஆகியவற்றின் நுகர்வு மேலோங்கிவிட்டது. பற்றாக்குறைக்கு மது போதைப்பழக்கமும் பெருகி விட்டது. (இணையத் திருமண தகவல் மைய தளங்களில் மணப்பெண் களில் கணிசமானோர் மது அருந்தும் பழக்க முள்ளதாக சுயவிவரங்களில் தெரிவித்திருப்பது... இந்திய சமுதாயம் எந்த திசையில் செல்கிறது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு. ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்’ என்ற பாரதி யின் கனவு தவறான புரிதலுடன் சிதிலமாகி வருகிறது)

       இந்தியாவின் பசுமைப் புரட்சித் திட்டங்களுக்கு முன்பு இயற்கை முறை விவசாயம் நிலவிய காலத்தில் விளைச்சல் குறைவு எனினும் ஆரோக்கியம் நிறைவாக இருந்தது. செயற்கை உரங்களைப் பயன்படுத்தியபின் விளைச்சல் பெருகியது போலவே வியாதிகளும் பெருகி விட்டன. விளை நிலங்கள் நஞ்சடைந்துவிட்டன. உணவுகளே விஷமாகி உயிரோடு விளையாடு கின்றன. மருத்துவமனைகளில் நோயாளி மனிதர் கூட்டம் நிரம்பி வழிகின்றது. 

- தீபா பதிப்பகத்தின் புதிய வெளியீடான “வாழ்க்கைமாற்ற நோய்கள்” எனும் நூலிலிருந்து

(மாற்று மருத்துவம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)

Pin It