1) பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்க்கு, இடஒதுக்கீட்டை மேலும் பத்து ஆண்டுக்கு நீட்டித்துச் சட்டமியற்றினார்.

2)  புத்த மதத்தைத் தழுவிய தாழ்த்தப்பட் டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய உதவி, உரிமைகளை அளித்தார்.

3)  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கான ஆணைக் குழுவுக்கு (கமிசன்) அமைச்சரக அதிகார உரிமையை வழங்கினார்.

4) வானொலி, தொலைக்காட்சிகளில் ஆளுங்கட்சியின் ஆதிக்கத்தை மாற்றத் தன்னாட்சி உரிமம் வழங்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார்.

5)  அமைச்சர், முதலமைச்சர் உள்பட எவர்மீது ஊழல் புகார் வந்தாலும், அவற்றை விசாரிக்கும் (ஆராயும்) ‘லோக்பால்’ எனும் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கச் சட்டமுன் வடிவமைப்புக் கொண்டு வரப்பட்டது, அவரது ஆட்சியில்தான்.

6) அஞ்சலுறைகளைப் பிரித்துப் பார்ப்பது, தொலைபேசியின் மூலம் ஒட்டுக் கேட்பது போன்ற, மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அரசியல் சட்டத்தின் ஐம்பத்தாறாவது பிரிவை நீக்கினார்.

7) ஒரு மாநிலத்துக்கு மட்டும் தனியாக, அவசர நிலையை அறிவித்து, அடிப்படை உரிமையைப் பறிக்கும் ஐம்பத்தொன் பதாவது சட்டத்திருத்தம் நீக்கப்பட்டது. (இது இராஜீவ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மனித உரிமைப் பறிப்பு சட்டத் திருத்தம்)

8) 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநில அரசுகள் கொண்டு வந்த அனைத்து நிலச் சீர்திருத்தச் சட்டங்களும் அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவின்கீழ் கொண்டு வரப்பட்டு இச்சட்டங்களை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாமல் தடுத்தார்.

9) அனைத்து அரசியல் கட்சிகளுடன் கலந்து பேசித் தேர்தல் சீர்திருத்த மசோதா கொண்டு வந்தார். பிறகு பிரதமராக வந்த சந்திரசேகர் அதைக் கூட்டுப் பொறுக்குக் குழுவுக்கு அனுப்பிக் கிடப்பில் போட்டார்.

10) பெண்களுக்கு 30 விழுக்காடு இடம் ஒதுக்கும் பஞ்சாயத்து ஆட்சி மசோதா கொண்டு வந்தார்.

11) நகராட்சிகள் நன்முறையில் வளர்ச்சி யடையத் தனிச் சட்டம் கொண்டு வந்தார்.

12)  வழக்கறிஞர்க்காகவும், ஏழையர்க்கும் பணமின்றி இலவச சட்ட உதவி பெற தனிச்சட்டம் கொண்டு வந்தார்.

13) தொழில் உறவுக் கொள்கையில், இதற்கு முந்தைய அரசு கடைப்பிடித்த வழி முறைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். (விலக்கினார்)

14) காங்கிரசு ஆட்சி, தொழிலாளர்க்கு எதிராகக் கொண்டு வந்திருந்த தொழில் உறவுக் கொள்கைகளை நீக்க புதிய தொழிலுறவுச் சட்டம் கொண்டு வருவதற்காகத் தொழிற் சங்கங்கள், தொழில் முகவர்கள், அரசு அலுவலர்கள் கொண்ட குழு அமைத்தார்.

15) நிர்வாகத்தில் தொழிலாளர்க்கு மிகுந்த பங்களிப்புக் கொடுக்க மசோதா கொண்டு வந்து முத்தரப்புக் குழு அமைத்தார். மே நாள் விடுமுறை அறிவித்தார்.

16) இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட் டிருந்தும், சுதந்திரத்துக்குப் பிறகு அமைக்கப்படாமலிருந்த, மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் அமைக்கப்பட்டது, அவரது ஆட்சியில்தான்.

17) புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்றாண்டுப் பிறந்த நாளில், அவருக்குப் பாரத இரத்தினா பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில், அம்பேத்கர் படம் வைக்கப்பட்டது. அம்பேத்கர் நூற்றாண்டு விழா நடத்தத் தேசியக் குழு  அமைக்கப்பட்டது.

18) பெண்கள் நலனுக்காக ஒரு தனி ஆணைக் குழுவினைச் சட்ட வடிவில் அமைத்து,  குழுவிற்கு அதிகார உரிமைகளை வழங்கினார்.

19) 1984ஆம் ஆண்டு தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலையில், விதவையான சீக்கியப் பெண்களுக்கு வழங்கப்பட்ட மாத உதவித் தொகை, முந் நூற்றிலிருந்து, ஐந்நூறாக உயர்த்தப்பட்டது.

குறிப்பு: (1984 இந்திராவைச் சுட்டுக் கொன்றதற்காகப் பழிவாங்கும் எண்ணத் தோடு, தில்லியிலும் மற்றும் சில பகுதிகளிலும் 6000 சீக்கியர்க்குமேல் கொல்லப்பட்டனர். இது இராஜீவ் காந்தி காலத்தில் நடந்தது.)

20) சிறுபான்மை மக்கள் நலனுக்காக 16 கொள்கைத் திட்டங்களை வகுத்தார்.

21) முகமதுநபி பிறந்த நாளைத் தேசிய விடுமுறை நாளாக்கினார்.

22)  மீனவரின் எந்திரப் படகுக்குக் குறைந்த விலையில் டீசல் உட்பட சலுகைகள் அளித்தார்.

23)  தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் விலக்கப் பட்டது.

24)  சிறு தொழில் மற்றும் கைவினைத் தொழிலுக்கான 680 திட்டங்களுக்குக் கடன் வழங்கப்பட்டது.

25)  சிறு தொழில்களுக்கான முதலீட்டை ரூ.3 இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தப்பட்டது. நடுத்தரத் தொழில்களுக்கு இதனை ரூ.35 இலட்சத்திலிருந்து ரூ.75 இலட்சமாக்கினார்.

26) சிறு தொழில்களுக்கு உதவுவதற்காகவே, ரூ.680 கோடியில் ஒரு தனி வங்கி அமைத்தார். உழவர், உழவுத் தொழிலாளர், கைவினைஞர்க்குக் கடன் ரூ.10 இலட்சம் வரை தள்ளுபடி செய்தார்.

27)  கோதுமை, நெல், கரும்பு, பருத்தி முதலியவற்றின் கொள்முதல் விலையை உயர்த்தினார்.

28)  வரவு செலவுத் திட்டத்தில் 49 விழுக்காட்டை விவசாயத்துக்கும், கிராமப்புறத்துக்கும் ஒதுக்கினார்.

29)  நகர்ப்புறத் துப்புரவு, தூய்மைக்காக ரூ. 4000 கோடி ஒதுக்கினார்.

30)  வளர்ச்சிப் பணிக்கு ஒதுக்கும் தொகையில் சரி பாதி, கிராமப்புறங்களுக்கு ஒதுக்கினார்.

31)  ஆண்டுக்கு 1.7 விழுக்காடு மட்டுமே உயர்ந்து வந்த வேலை வாய்ப்பை, 1990 முதல் ஆண்டுக்கு 3 விழுக்காடாக உயர்த்தினார். (இவ்வுயர்வு பத்தாண்டுக் காலத்துக்கு)

32) அனைவருக்கும் வேலை என்ற அடிப்படை யில் வேலை கோரும் உரிமையை அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமையாக்கும் திட்டத்தைத் தேசிய வளர்ச்சி அமைப்புக் குழுவில் வைத்தார். இதற்காக முதலமைச்சர்கள் குழுவை அமைத்தார். இக்குழு அரசியல் சட்டத்திருத்த மசோதாவையும், வேலை உறுதிப்பாட்டு மசோதாவையும் தயாரித்தது.

33)  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை உரு வாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

34)  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மைய அரசிலும் மையப் பொதுப் படிப்பு நிலையங்களிலும்27 விழுக்காடு, ஒதுக்கீடு செய்யும் மண்டல் குழுவின் பரிந்துரையின் ஒரு பகுதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

35)  அரசு அலுவலகங்களில் தனது புகைப்படம் வேண்டாம் என்றவர். தனி விமானப் பயணம் தவிர்த்து, பயணிகள் விமானத்திலேயே பயணித்தார்.

தகவல் : ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ வார இதழ் 30.3.1991

Pin It