தோழர் பெரியார் இந்திய விடுதலையைப் பார்ப்பன - பனியாக்களின் ஒப்பந்த முறை என்று கூறினார். “வெள்ளத்துரைமார் ஆதிக்கஞ்செலுத்திய இடங்களை கறுப்புத் துரைமார் பிடித்துக் கொண்டு, ஆதிக்கஞ் செலுத்துவார்கள், பிற நாட்டார் சுரண்டியதற்கு பதில் நம் நாட்டவர் சுரண்டுவர்” என்று மதிப்பீடு செய்தார். இதுதான் இன்று எதார்த்த உண்மை.

ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரிஸ் - அனில் அகர்வால் (பனியா)  என்றவரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மட்டுமல்ல இந்தியாவில் பெருமளவு நிறுவனங்கள் பார்ப்பன - பனியாக் கும்பல்களால் தான் நடத்தப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருமளவு இவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இது ஏதோ எதேச்சையான நிகழ்வு அல்ல. இது காலம் காலமாக இருந்துவரும் பார்ப்பனிய உற்பத்தி முறையே ஆகும். இந்த உற்பத்தி முறை வெறும் பிறப்பின் அடிப்படையிலேயே மட்டுமே நடந்து வருகின்றன.

பிராமணனின் வேலை ஓதுதலும் ஓது வித்தலும், சத்திரியனின் வேலை அரசனாக ஆட்சி செய்வதும், வைஷியனின் வேலை வணிகம் செய்வதும், சூத்திரனின் வேலை மேற்கண்ட மூன்று வர்ணங்களுக்கு சேவை செய்வதும் என்கின்ற சாதியப் படிநிலை அமைப்பை ஏற்படுத்தி, இன்று வரை பார்ப்பனர்கள் தனது சுக போக வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர். சூத்திரர்கள் இன்றும் சுரண்டப்படும் மக்களாகவே இருந்துவருகின்றனர். பார்ப்பனர்கள் மனுதர்மம் போன்ற சட்டங்களை உண்டாக்கி தங்களின் மேலாதிக்கத்தை நிலை நாட்டிக்கொண்டனர். இன்றும் அதே நிலை தான் தொடர்கின்றன. 

“பொறாமையின்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார்”. என்கின்றது மனு.

“தர்மேண்லப் துமீஹேத,

லப்தம்யத்நேன பாலயேத்;

பாலிதம் வர்த்தயேந் நித்யம்

வருத்தம் பாத்ரேஷு நிக்ஷிபேத்”   (யாக்ஞவல்கியர்)

இதன் பொருள்: தருமமுறைப்படி (தன் குலத்திற்குரிய நெறிப்படியே) பொருளை ஈட்டுக. ஈட்டியதைக் காத்து மேன்மேலும் பெருக்குக. அங்ஙனம் பெருக்கிய பொருளைப் பிராமணனுக்குக் கொடுத்துவிடுக.

கஷ்டப்பட்டு பாடுபட்டு உழைத்த பணத்தைச் சடங்குகளின் பெயராலும், கடவுள்களின் பெய ராலும் பார்ப்பனர்கள் நம்மைச் சுரண்டுகின்றனர். இப்படிப்பட்ட இந்தப் பார்ப்பனிய உற்பத்தி முறையையும், சுரண்டல் முறையையும் ஒழித்துக் கட்டியாக வேண்டும். வெறும் பிறப்பின் அடிப் படையில் பிறவி அந்தஸ்த்துக்காரர்களாக வாழும் பார்ப்பனர்களும் பனியாக்கும்பல்களும் (வைஷியர்). பொருளாதாரத்தைத் தங்களின் கட்டுப்பாட்டி லேயே வைத்துக் கொண்டு பாடுபடும் மக்களைச் சுரண்டிவருகின்றனர். பல வணிக நிறுவனங்களும் இவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அதை 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு புள்ளி விவரத்தின் மூலம் காணலாம்.

வணிக நிறுவனங்கள்

* ஏ.சி.சி பார்ப்பனரால் நடத்தப்படுகிறது (சுமித் பானர்ஜி),

* பெல் நிறுவனம் பார்ப்பனரால் நடத்தப்படுகிறது (ரவிக்குமார் கிருணணசாமி),

* பார்தி ஏர்டெல் பனியாவால் நடத்தப்படுகிறது (சுனில் மித்தல்),

* கிராசிம் மற்றும் ஹிண்டால்கோ பனியாவால் நடத்தப்படுகிறது (குமார் மங்கலம் பிர்லா),

* ஹெச்.டி.எஃப்.சி பனியாவால் நடத்தப்படுகிறது (தீபக் பரேக்),

* ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் பார்ப்ப னரால் நடத்தப்படுகிறது (நிதின் பராஞ்பே),

* ஐ.சி.ஐ.சி.ஐ பார்ப்பனரின் தலைமையில் நடத்தப்படுகிறது (கே.வி காமத்),

* ஜெயபிரகாஷ் அசோசியேட்ஸ் பார்ப்பனரால் நடத்தப்படுகிறது (யோகேஸ் கெளர்),

* லார்சன் அன்ட் டூப்ரோ பார்ப்பனரால் நடத்தப்படுகிறது (ஏ.எம் நாயக்),

* என்.டி.பி.சி பார்ப்பனரால் நடத்தப்படுகிறது (ஆர்.எஸ். சர்மா),

* ஓ.என்.ஜி.சி பார்ப்பனரால் நடத்தப்படுகிறது (ஆர்.எஸ் சர்மா),

* ரிலையன்ஸ் குழு நிறுவனம் பனியாவால் நடத்தப்படுகிறது (முகேஸ் மற்றும் அனில் அம்பானி),

* ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பார்ப்பனரால் நடத்தப்படுகிறது (ஓ.பி பாட்),

* ஸ்டெர்லைட் பனியாவால் நடத்தப்படுகிறது (அனில் அஹர்வால்),

* சன் பார்மா பனியாவால் நடத்தப்படுகிறது (திலிப் சங்வி) ,

* டாட்டா ஸ்டீல் பார்ப்பனரால் நடத்தப்படுகிறது (முத்துராமன்),

* பஞ்சாப் நேசனல் வங்கி பார்ப்பனரால் நடத்தப்படுகிறது (கே.சி சக்கரவர்த்தி),

* பேங்க் ஆஃப் பரோடா பார்ப்பனரால் நடத்தப்படுகிறது (எம்.டி மல்யா),

* கனரா வங்கி பனியாவால் நடத்தப்படுகிறது (ஏ.சி மஹாஜன்),

இந்தியாவின் மென்பொருள்- தொலைபேசி நிறுவனங்கள்

* இன்ஃபோசிஸ் பார்ப்பனரால் நடத்தப்படுகிறது (கிரிஸ் கோபாலகிருஸ்ணன் மற்றும் நாராயண மூர்த்தி மற்றும் நந்தன் நிலெக்கணி),

* டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் பார்ப்பனரால் நடத்தப்படுகிறது

* ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (அம்பானி),

* ஏர்டெல் (மித்தல்),

* வோடபோன் (எஸ் ஸார் ருயா),

* ஐடியா (பிர்லா),

* ஸ்பைஸ் (மோடி)  ஆகிய நிறுவனங்கள் பனியாக்களுக்குச் சொந்தமானவை.

* கிங் ஃபிசர் பார்ப்பனரால் நடத்தப்படுகிறது (விஜய் மல்லையா),

* ஜெட் ஏர்வேஸ் பனியாவால் நடத்தப்படுகிறது (நரேஷ் கோயல்),

* இந்தியன் கிரிக்கெட் பனியாவால் நடத்தப்பட்டு வருகிறது. (லலித் மோடி) அவருக்கு முன்னாள் அது மற்றொரு பனியாவால் நடத்தப்பட்டது (ஜக்மோகன் டால்மியா)

https://www.livemint.com/Leisure/3u2QUPuXBEFPaBQXU2R8mJ/When-will-the-BrahminBania-hegemony-end.html

மனுசாஸ்திரக் காலம் தொடர்கிறது

“பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்குக் கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும், பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமான தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததான தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம்' இருந்து வருகிறது.

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு, ‘அரச நாயகம்’ ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழுச்சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடிய வில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்’ ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும்.” - தோழர் பெரியார் ‘விடுதலை' 28.12.1968

பார்ப்பனர்கள் எல்லா உரிமையையும் தன்வசப் படுத்திக்கொண்டு, சில உரிமைகளை சத்திரியர்களுக்கும் அதைவிடக் குறைவான உரிமை வைஷியனுக்கும் வழங்கினர். சூத்திரர்களுக்கு எந்த விதமான உரிமையும் வழங்கவில்லை. பார்ப்பனர் களை எதிர்த்து ஏதேனும் உரிமை பெற நினைத்தால் அக்கணமே சூத்திரர்களுக்குக் கொலை முதலியன தண்டனைகள் விதிக்கப்படும் என்கின்ற மனு சாஸ்திரக் காலத்து நிலை இன்றும் மாறவில்லை.

சூத்திரன் குற்றம் செய்தால் மரண தண்டனையும் பார்ப்பான் கொலை செய்தால் அவனின் தலை முடியை மட்டும் வெட்டினால் போதுமானது என்கிறது மனுச்சட்டம். பார்ப்பன எஸ்.வி சேகர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத அரசு. சூத்திரர்கள் உரிமைக்காகவும் தங்கள் நலனுக்காகவும் போராடும் போது பார பட்சம் இல்லாமல்  சுட்டுக்கொல்லப் படுகின்றனர். பார்ப்பனர்களும் பார்ப்பன தாசர்களும் இருக்கின்ற வரையில் மனுசாஸ்திர ஆட்சிதான் நடக்கும். எனவே இன்றைய ஆட்சி முறையும் இன்றைய சமூக அமைப்பு முறையும் ஒழியவேண்டும் வேண்டும்.

பார்ப்பன - பனியாக்களின் மேலாதிக்கங்கள் இருக்கும் வரை, பார்ப்பனிய நலனுக்கான அரசுகள் இருக்கும் வரை, பார்ப்பனிய சாதிய முறையைப் பின்பற்றும் மக்கள் இருக்கும் வரை, பார்ப்பனிய மனநிலை இருக்கும் வரை, பார்ப்பனியச் சிந்தனை இம்மண்ணில் இருக்கும் வரை, இவற்றைக் காக்கும் கடவுள், மதம், சாஸ்திரம் இருக்கும் வரை - சூத்திரர்களின் உயிர் பார்ப்பனர்களின் தலை மயிருக்கு ஒப்பாகும். சூத்திரனுக்கு நீதி என்பது கேள்விக்குறியாகும்.