(இந்து பாசிசமானது எவ்வாறு அனைத்து அரங்குகளிலும் நீண்டகால நோக்குடன் பன்முகப் பரிமாணத்துடன் காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்து தனது இலக்கை அடைவதில் உறுதி யாக இருந்து முன்னேறுவதில் முனைப்புடன் இருந்து வருவதை இக்கட்டுரையின் முந்தைய இதழில் கண்டோம்.)

இந்து பாசிசத்தை வளர்த்துவிடும் தலித்தியவாதிகள்

இந்து பாசிசத்தின் கருத்தியலான பிராமணி யத்தை எதிர்த்த அம்பேத்கரை திருவுருவாக்கி விட்ட அம்பேத்கரியவாதிகள்/தலித்தியவாதிகள் உள்ள நிலையில் அந்த திருவுருவாக்கலை இந்து பாசிசமும் மேற்கொண்டு அதன் பலனை தன தாக்கி தலித் மக்களை சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக கொம்பு சீவிவிட எத்தனிக்கிறது. இதை அம்பேத்கரியவாதிகள்/தலித்தியவாதிகள் உரிய அளவில் எதிர்க்காமல் இருந்து வருகிறார்கள்.

மாறாக, இந்து பாசிசத்தின் பிறப்பிடமான மகாராஷ்டிராவில் இந்திய குடியரசுக் கட்சியின் வெவ்வேறு பிரிவுகள் பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அவை வீசும் எலும்புத் துண்டுகளை பொறுக்கி வருகின்றன.

உத்தரபிரதேசத்திலோ கேட்கவே வேண் டாம். மாயாவதி இந்து பாசிச கட்சியான பாஜக-வுடன் கூட்டணி ஆட்சிகளை நடத்தியது மட்டுமல்லாமல் பிராமணர் சாதி சங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து தனியாக 2007இல் அங்கு ஆட்சியை பிடித்தார். அந்த ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு பிராமணர்கள், ரஜபுத்திரர்கள் ஆகிய சாதிகளைச் சேர்ந்த பெரு நிலக்கிழார்களின் நிலங்களின் மீது கைவைக்காமல் இருந்தார். அங்கு இறங்கு முகத்தில் இருந்த பாஜக இப்போது 2016இல் ஆட்சியை பிடிக்கக்கூடிய நிலையினை கண்டு வேடிக்கை பார்க்கிறார்.

மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளு மன்றவாத உத்தியின் வாயிலாக வாக்குகளைப் பிரித்து குஜராத், கர்னாடகா ஆகியவற்றில் இந்து பாசிசமானது ஆட்சியை பிடித்ததற்கு/பிடிப்பதற்கு உதவி வருகிறது.

தமிழ்நாட்டிலும் இந்து தலித் அரசியலை மேற்கொண்டு பிழைப்பு நடத்தி இந்த பாசி சத்தை வளர்த்துவிடும் போக்கு அண்மைய ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது.

பாலசுந்தரம் (அம்பேத்கர் மக்கள் இயக்கம்) பாஜக அணியின் சார்பில் தேர்தலில் நின்றார். கிருஷ்ணபறையனார், ‘தடா’ பெரியசாமி (விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகி) போன்றோர் வெளிப்படையாகவே இந்து தலித் அரசியலை முன்வைக்கிறார்கள்.

ஏற்கனவேயுள்ள தாழ்த்தப்பட்டோர்/பழங் குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்றவற்றை ஒழங்காக அமுல்படுத்தாத இந்து பாசிசமானது பிற்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆகியோரிடையே மோதலை உருவாக்கவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பீகார், உ.பி. ஆகிய மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை வாங் கவும் மேற்காணும் சட்டத்தில் ஒரு திருத்தத்தை நிறைவேற்றி தன்னை தலித் மக்களின் பாது காவலனாகக் காட்டிக் கொள்ள எத்தனிக்கிறது. இதை அம்பலப்படுத்தாத மதிபறையனார் உள்பட பிழைப்புவாத அம்பேத்கரியவாதிகள் இந்து பாசிச ஆட்சிக்கு சென்ற 13.8.2015 அன்று சென்னையில் நன்றி அறிவிப்பு கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

அதே போல சாதிய இந்துமதச் சார் புள்ள பிழைப்புவாத தேவேந்திர குல வேளா ளர்கள் ஆகஸ்ட் 2015 முதல் வாரத்தில் மதுரையில் இந்து பாசிச கும்பலின் தலைவன் அமித்ஷாவின் தலைமையில் தமக்கு தாழ்த்தப்பட்டோர் வகை யிலான இட ஒதுக்கீடு வேண்டாம் என்றும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து தம்மை நீக்குமாறும் மாநாட்டை நடத்தி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

வாய்ப்புகள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் மதம் மாறிய தலித்துகளை போட்டியாக பார்த்து இந்து (பறையர் சாதிய) தலித்தியவாதிகள் அருந் ததியர்களுக்கு உள்ஒதுக்கீட்டையும் எதிர்க்கிறார்கள்.

இவர்கள் (பறையர்) இந்து பாசிசத்தை தலித்து களுக்கான எதிரியாக பார்க்காமல் மதம் மாறிய தலித்துகளையும் ஏனைய உட்சாதி தலித்துகளையும் மட்டும் எதிரியாகப் பார்த்து சாதியை கட்டிக் காக்கும் இந்து பாசிசத்திற்கே சேவை செய்து வருகிறார்கள்.

இவர்கள் மட்டுமன்றி தனிநபர் தலித்திய வாதிகள்/அம்பேத்கரியவாத அறிவுஜீவிகளில் ஒரு (கணிசமான) பிரிவினரும் இதே நிலைப் பாட்டை மேற்கொள்வதோடு சாதிவாரி கணக் கெடுப்பை எதிர்ப்பதோடு பிற்படுத்தப்பட்ட சாதியை முதன்மையான எதிரியாக காட்டி பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஏனைய மேல் சாதி யினரின் ஆதிக்கத்தை உரிய அளவில் எதிர்க் காமல் இருக்கிறார்கள். அத்துடன் பொது எதிரியான சாதியையும் அதனை கட்டிக் காக்கும் இந்து பாசிசத்தை முறியடிப்பதற்கு கம்யூனிஸ்டுகள்/பெரியாரியவாதிகளோடு ஒன்று சேருவதற்கு மாறாக அவர்களையும் எதிரிகளாக காட்டி இந்து பாசிசத்தை வளர்த்து வருகிறார்கள்.

இத்தகைய இந்து பாசிசமானது இவ்வாறு நாடாளுமன்றம், அரசு எந்திரம், கருத்தியல் பண்பாடு, மதம், வரலாறு ஆகிய அரங்குகளில் நிலைமைகளுக்கு ஏற்ப புதிய அணுகுமுறை களையும் புதிய ஆய்வுகளையும் மேற்கொண்டு நடைமுறையில் செயற்பட்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டு அரசியல் அரங்கில் இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளது.

ஒரு புள்ளியில் மையப்பட்டு முடிவெடுத்து ஒன்றுக்கொன்று முரணான பல தடங்களில் பயணித்து, அதாவது, அதன் மூலஉத்தி (ஷிtக்ஷீணீtமீரீஹ்) ரீதியான அம்சங்களுக்கே முரணான செயலுத்தி (tணீநீtவீநீ) ரீதியாக செயற்பட்டு, அதற் காக சாம,பேத, தான, தண்டம் என அனைத்து உத்திகளையும் செயற்படுத்தி தனது மூலஉத்தி இலக்கான இந்து ராஷ்டிரா என்ற அதே ஒற்றைப் புள்ளியை அடைவதற்கு வந்து சேருவதற்கே இத்தகைய பயணம். அது அத்தகைய இந்து இராஷ்டிராவை அடைவதற்கு பார்ப்பனியத் திற்கு உயிர் கொடுத்த ஆதி சங்கரரின் ஒருமைவாத அத்வைதத்தை வழிகாட்டியாக கொள்கிறது.

ஒருமைவாத அடிப்படையில் பன்முகத் தன்மையில் செயற்பட்டுவரும் இத்தகைய இந்து பாசிசத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள் ஆகியோர் அதனை பன்முகப் பரிமாணத்துடன் புரிந்து கொள்ளாமல், மாறாநிலை கண்ணோட்டத் துடன் தட்டையாக, சுருக்கவாதச் கண்ணோட் டத்தில் புரிந்து கொள்வதால் அது 35 ஆண்டு கால அவகாசமெடுத்து வளர்ந்ததற்கு வாய்ப்பை வழங்கிவிட்டனர் எனலாம்.

பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகவும் மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பொதுச்செயலராகவும் இருந்த தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் 1920களின் இறுதியிலேயே பாசிசத்தின் அபாயத்தை எச்சரித்து வந்ததோடு பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை மக்கள் திரளிடையே கட்டியமைக்குமாறு விடுத்த அறைகூவலை ஒட்டி அத்தகைய முன்னணியை ஸ்டாலினும் மாவோவும் பாசிசத்தை தத்தமது நாடுகளில் வீழ்த்தியது மட்டுமன்றி அதன் வாயிலாக உலகிலிருந்தே அப்போது விரட்டி யடித்தனர்.

இந்து பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியே தீர்வு

இந்தியாவிலோ/தமிழகத்திலோ ஐக்கிய முன்னணி குறித்து குறுங்குழுவாத/சந்தர்ப்ப வாத பார்வையில் வறட்டுவாத அடிப்படையில் சிபிஐ, சிபிஎம், மாவோயிஸ்ட் கட்சி உள்ளிட்ட வெவ்வேறு கம்யூனிஸ்ட் அமைப்புகள் செயற் பட்டு வருகின்றன.

இக்கட்சிகள் ஸ்டாலினிடமிருந்தும் மாவோ விடமிருந்தும் ஏன் அண்டை நாடான நேபாளத்தில் முடியாட்சியை வீழ்த்துவதில் ஐக்கிய முன்னணி என்ற செயலுத்தியை செயற்படுத்தியதில் வெற்றி பெற்ற நேபாள மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தாவிடமிருந்தும் படிப்பினையை பெறாமல் செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்வ தற்கு பிடிவாதமாக இருக்கின்றன.

முன்பேயே அதாவது 1922இல் மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் சார்பில் மக்கள் முன்னணி, ஐக்கிய முன்னணி ஆகியவற்றை கட்டித்தான் மக்கள் திரளிடையே செயற்பட வேண்டும் எனக் கூறும் தீர்மானம் இயற்றப்பட்டது.

மேற்காணும் கம்யூனிஸ்ட் அமைப்புகள் அதை அறவே செயற்படுத்தாதால் இன்று இந்து பாசிசம் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

அனைத்து கம்யூனிஸ்ட் அமைப்புகளும் இந்து பாசிசத்தை மூல உத்திரீதியாகவும் செயலுத்தி ரீதியாகவும் எதிரியென வரையறுத்தாலும் அதற் கான ஐக்கிய முன்னணியை பிரத்யேகமாக கட்டுவதற்கு தயாராக இல்லை. ஏனெனில் பெரும் பாலான கம்யூனிஸ்ட் அமைப்புகளுக்கு மூல உத்திக்கும் செயலுத்திக்கும் இடையிலான உறவு குறித்து பருண்மையான பார்வை இல்லை. இருக்கும் பார்வையோ இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் பார்வையாகவோ கதம்பவாதப் பார்வையாகவோ சுருக்கவாதமாக வெறும் கடமை குறித்ததாகவே வெறும் முழக்கம் குறித்த தாகவோ இருக்கிறது. அது அரசியல் அதிகாரம் தொடர்பான ஒன்று என்ற பார்வை இல்லை,

ஸ்டாலினும் மாவோவும் பாசிசத்தை அரசியல் அதிகாரம் தொடர்பான ஒன்றாகப் பார்த்ததால் தான் அதை முறியடிக்க முடிந்தது. இந்தியாவிலோ அதை கறுப்புச் சட்டங்களினாலான அரசு அடக்கு முறை என்ற ஒன்றாகவே பெரும்பாலான கம்யூனிஸ்ட் அமைப்புகள் புரிந்து கொள்கின்றன.

அவ்விசயத்திலும் சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் தொழிலாளர் விரோத கறுப்புச் சட்டங் களைத் தவிர ஏனைய கறுப்புச் சட்டங்களை எதிர்ப்பதில்லை. சொல்லப் போனால் அவை, ஆண்ட/ஆளும் மாநிலங்களில் அச்சட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன. மேலும் அரசு அடக்கு முறையையும் தத்தமது கட்சி களின் அன்றைய குறுங்குழுவாத, சந்தர்ப்பவாத நலனுக்கேற்பவே தெரிவு செய்வது எதிர்க்கின்றன. ஒட்டுமொத்த மக்களின் நலனிலிருந்தோ ஜன நாயக உரிமைகளுக்கான வெளி என்பதிலிருந்தோ எதிர்ப்பதில்லை. இப்போக்கு இந்து பாசிச சக்திகள் இன்று அரசியல் அதிகாரத்தில் அமருவ தற்கு உதவியிருக்கின்றன. இது ஹிட்லர் முதலாவ தாக ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியை ஒழித்த போது கம்யூனிஸ்ட் கட்சியானது வேடிக்கை பார்த்ததற்கு ஒப்பாகும். பின்னர் அதே ஹிட்லர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை நர வேட்டை யாடினான்.

பிரிட்டிசார் தமது ஆட்சிக்காலத்தில் இந்தியா வில் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தபோதும் நேரு இரண்டு தடவைகள் தடை செய்தபோதும் பின்னர் சிபிஎம் தடை செய்யப்பட்ட போதும் அவசர நிலைக் காலத்தின் போதும் சிபிஐ, சிபிஎம் ஆகியன ஐக்கிய முன்னணியின் வாயி லாக இந்த அரசு பாசிசத்தை எதிர்கொள்வதற் கான கண்ணோட்டமே இல்லாமல் மக்களை பலியிட்டன. இன்றைக்கோ அரசு பாசிசத்தை பயன்படுத்தி இந்து பாசிசம் ஆட்சிக்கு  வந்து விட்டது.

பாசிசம் அல்லது அரசு பாசிசம் அல்லது இந்து பாசிசம் என்பது அதன் அச்சுறுத்தல், அபாயம் ஆகியன குறித்து சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட வெவ் வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் தெளிவில்லாமல் கதம்பவாதமாக பாசிசத்தின் அந்தந்த கட்டத்தை அணுகுகின்றன. (இந்து) பாசிசமானது அச்சுறுத்தல் கட்டத்தில் இருக்கிறதா அபாயக் கட்டத்தில் இருக்கிறதா அரியணையில் இருக்கிறதா என்பது பற்றி தெளிவில்லாமல் இந்து பாசிச சக்திகள் அதிகாரத்தை பிடித்துவிட்டதில் மட்டுமே ஒத்த புரிதளால் இருக்கின்றன.

இந்த நிலையில், இந்திராவின் அவசர நிலையை ஆதரித்துவிட்டு பின்னர் சுயவிமர்சனம் செய்து கொண்ட சிபிஐ, மீண்டும் அவசர நிலை வராது என அக்கட்சியின் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி அண்மையில் கூறியுள்ளார்.

பெரும்பான்மை மதவாதமான இந்து மதவாதத்தையும் அதன் விளைபொருளான சிறுபான்மை மதவாதமான இஸ்லாமிய மதவாதத்தையும் சமப்படுத்தி முஸ்லிம்லீக்கை தன்னிடமிருந்து காங்கிரஸ் அணியிடம் தள்ளி விட்டதோடு இந்து பாசிசத்திற்கு எதிராக திட்டவட்டமாக எதுவும் செய்யாத சிபிஎம்மின் கே.வரதராசன் அது பாசிச நிகழ்வுப் போக்கில் இருப்பதாக ‘தீக்கதிர்’ நாளிதழ் அண்மையில் எழுதியுள்ளனர்.

சிபிஎம்மானது இவ்வாறு மதிப்பிடும் பட்சத்தில் அது செய்யவேண்டிய ஒரே வேலை யானது ஸ்டாலினும் மாவோவும் மேற்கொண்ட பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியே ஆகும். அதுதான் ஆளும்/ஆண்ட மாநிலங்களில் (மேற்கு வங்கம், கேரளா ஆகியன) இந்து பாசிசம் வளருவதற்கு வாய்ப்பு வழங்கிவிட்ட நிலையில் இதை செய்யும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம். டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத் தையே இந்து பாசிஸ்டுகள் தாக்கிய பின்னரும் மவுனமாக இருந்துவரும் கட்சிதானே அது.

இந்து பாசிசத்தின் சமூக அடித்தளமாக மாறி யுள்ள நடுத்தர வர்க்கத்தை தனது கட்சியின்/தொழிற்சங்கத்தின் அடித்தளமாக உடைய சிபிஎம் அவ்வர்க்கத்திடம் தொழிற்சங்கவாத மாக, பொருளதாரவாத, செயற்பட்டதால் நடுத்தர வர்க்கமும் தனது அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சிக்கு இந்து பாசிசம் வழிகோலும் என அக்கானல் நீரை தேடி ஓடுகிறது.

சிபிஎம்மின் தொழிற்சங்கவாதத்தால், பொருளாதாரவாதத்தால் தோற்றமெடுத்த நடுத்தர வர்க்கம் சிபிஎம்மிற்கு எதிராகவே திரும்பிவிட்டது.

சிபிஎம்மின் இத்தகைய பொருளாதார வாதத்திற்கும் தொழிற்சங்கவாதத்திற்கும் ஊற்றுக் கண்ணாக விளங்குவது நாடாளுமன்ற வாதமே ஆகும். அது நாடாளுமன்ற ஜனநாய கத்தை அறவே ஏற்றுக் கொள்ளாத இந்து பாசி சத்தை நாடாளுமன்ற செயற்பாட்டிலேயே முறியடித்திட முடியும் என்ற நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கி இந்து பாசிசமானது ஆட்சியில் அமர்ந்துள்ளதற்கு மறைமுகமாக சேவையாற்றி யுள்ளது.

இந்து பாசிச அபாயம் 1980/1990களில் வளரத் தொடங்கியவுடன் அவியல் கூட்டணிகளான ஜனதாதளம், தேசிய முன்னணி, தேவகவுடா, குஜ்ரால் அரசாங்கங்களையும் மென்மையான இந்துத்துவக் கட்சியான காங்கிரஸ் தலைமை யிலான மன்மோகன் சிங் அரசாங்கத்தையும் (2004-09) சிபிஎம் ஆதரித்து சொந்த கட்சியின் நாடாளுமன்ற பலம் வீழ்ந்துபோனது.

அதன் நிலைமை இந்தளவுக்கு சீரழிந்த பின்னரும், வரும் சட்டமன்றத் தேர்தலில் (2016) மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணியை அமைக்க வேண்டும் என மேற்கு வங்க சிபிஎம்மின் தலைவர்கள் அண்மையில் பேசி வருகின்றனர்.

அனைத்திற்கும் மேலாக, இந்து பாசிசமானது மேலும் வளருவதற்கு ஏதுவாக சொந்தக் கட்சி யை வளர்ப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக குறுங்குழுவாத அடிப்படையில் முடிவெடுத் துள்ளது அதன் விசாகப்பட்டினம் காங்கிரஸ்.

இந்திய மாவோயிஸ்ட் கட்சியோ அது வலுவாக வுள்ள சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட இந்து பாசிசத்தை வீழ்த்துவதற்கான எவ்வித திட்டத் துடனும் இல்லாமல் குறுங்குழுவாத, இராணுவ வாதச் செயற்பாட்டிலேயே அதை முறியடித்து விட முடியும் என நம்பி அதனால் கடும் பின்னடைவுகளையே பலனாகப் பெற்று வருகிறது.

Pin It