16வது  தமிழக சட்டமன்றத் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து வாய்ப்பிய (சந்தர்ப்பவாத) பிளவுவாத காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

தமிழக, இந்தியச் சூழலைப் பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தல் குறித்த சிக்கல் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது. தேர்தல் பங்ககேற்பியமும் (பங்கேற்புவாதம்) புறக்கணிப்பியமும் (புறக்கணிப்பு வாதம்) இன்னும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன.

ஒருபக்கம் சி.பி.அய்., சி.பி.எம். ஆகியன நாடாளுமன்றத்தின் மூலமே சமூககின்கின்றன. தங்களது செயல்முழக்க நாடாளுமன்ற, சட்டமன்ற அதிகாரத்திற்காகவும் சீட்டுக்காகவும் கவனத்தைக் குவிக்கின்றன.  இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசை எதிர்க்க சோனியா காங்கிரசுடன் தொகுதி உடன்பாட்டை செய்து கொண்டுள்ளன. இடதுசாரிகள் தனியே தங்களது பலத்தை வலுவாக்கி௧ கொள்ள துணியவில்லை.

தமிழகத்தில் இடது ஜனநாயக முன்னEயை உருவா௧குவதாக கூறிக்கொண்டு கடைசியில் “கேப்டன் விஜயகாந்த் அணி”யை உருவாக்கி உள்ளனர். விஜயகாந்தும் வாசனும் எந்த குறைந்தபட்ச திட்டத்துடன் ஒன்றுபடுகின்றனர் என்று தெரியவில்லை. “முதல்வரை” உருவாக்கும் “கிங் மேக்கர்”களாக செயல்படுவோம் என்று ஆர்ப்பரிக்கின்றனர். கடந்த காலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவ௱களை இவ௱கள்தான் தாங்கிப்பிடித்து வளர்த்தெடுத்தனர்.

தமிழகத்தில் செயல்படும் சி.பி.அய். (எம்.எல்) விடுதலை சடங்குத்தனமாக தேர்தலை அணுகுகிறது. இதிLருந்து பிரிந்து வந்த மக்கள் விடுதலை தங்களது அடிப்படை நிலைபாடுகளிலேயே தெளிவில்லாததால் இது தேர்தLலும் எதிரொLக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.எஸ்.பி. போன்ற கட்சிகளின் தனி நபர்களை ஆதரித்தது. கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சி.பி.அய். மகேந்திரனை ஆதரித்து மிக கடுமையாக வேலை செய்தது. இத்தேர்தலில் அதே போன்று குறிப்பிட்ட ஒரு கூட்டணியில் உள்ள சில கட்சிகளை சேர்ந்த தனிநபர்களை ஆதரிப்பது (தன்னார்வக்குழுக்கள் சொல்லும் நல்லவர்களை ஆதரிப்பது போன்று) என்பதில் குழம்பி நிற்கின்றனர்.

சில கட்சிகளையோ அல்லது கட்சிகளைச் சேர்ந்த நபர்களையோ எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்பது இவர்களுக்கே வெளிச்சம!

ஆனால்,  தெளிவாக இவர்கள் கொள்கைகளை முன்வைப்பதில்லை.

மேற்கண்டவையெல்லாம் பங்கேற்பியன் வாய்ப்பியங்களாகும்.

எனவே,

1. அடிப்படைக் கொள்கைகளில் உடன்பாடு காணும்பொழுது தொடர்ச்சியாக செயல்படும் முன்னணியை கட்டலாம். இது தேர்தலிலும்  பங்கேற்கும்.

2. கடும்  நெருக்கடி உருவாகும்பொழுது எடுத்துக்காட்டாக பாசிச ஆட்சியை தூக்கியெறிய நேரும்பொழுது பொது எதிரிக்கு எதிராக அய்க்கிய முன்னணியை கட்டலாம். இது தேர்தலிலும் பங்கேற்கலாம்.

இவையெல்லாம் தேர்தல் காலத்திற்கு மட்டும் சேரும் பட்சத்தில் அது பங்கேற்பியத்தின் வாய்ப்பியமாகும். பங்கேற்பியத்தின் மிக முக்கிய அம்சமே புறக்கணிப்பின் தேவையை முற்றிலுமாக அது நிராகரிக்கிறது என்பதாகும்.  பங்கேற்பியம் ஒற்றை அம்சத்தை வலியுறுத்தும் ஒருபக்க பார்வையாகும்.

புறக்கணிப்பியம் எந்தவித சமூக எதார்த்தத்துடனும் தொடர்பு கொள்ளவில்லை. மக்களிடமிருந்து அந்நியப்பட்ட ஒரு நிலைதான் நிலவுகிறது. ம.க.இ.க.வோ மாவோயிஸ்டுகளோ தங்களை “புனிதர்களாக” காட்டிக் கொள்ளத்தான் பயன்படுகிறது.  மக்களைத் திரட்ட இவர்கள் அது பயன்படுத்தும் இதர வடிவங்களைப் போன்றுதான் குறுங்குழு, வரட்டுகோட்பாட்டிய (வரட்டுவாதம்) இவர்களிடம் வெளிப்படுகிறது.

மேலும், வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இவர்கள் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்¬¬யை தங்களது புறக்கணிப்பிற்கு ஆதரவாக எண்ணி அக மகிழ்கிறார்கள். உண்மையில், மக்கள் அரசியல்ரீதியாக கிளர்ந்தெழுந்து புறக்கணிக்கவில்லை.

மாறாக, அதிருப்தியுற்றவர்கள்,  அக்கறையில்லாதவர்கள், மேட்டுக்குடியினர்தான் வாக்களிக்காமல் உள்ளனர். இது அரசியல் புறக்கணிப்பு கிடையாது. இதை ஒரு அளவு கோலாக எடுக்க முடியாது.

தொழிலாளர்களும் விவசாயிகளும் அடிப்படை வர்க்கமும் பெருமளவில் திரண்டு வாக்களிக்கின்றனர். இது முக்கியமாக கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விசியமாகும்.

அடுத்து, இவர்கள் இந்த அரசு பிற்போக்குத்தனமான அரசு ; அதனால் பங்கு கொள்ளக்கூடாது எனக் கூறுகின்றனர். இக்கருத்தும் தவறு என்று புரட்சிகளின் வரலாறு கூறுகிறுது.

படுபிற்போக்கு அரசான ஜாரின் அரசில் லெனின் தலைமையிலான போல்ஸ்விக் கட்சி தேர்தலில் பங்காற்றியது. சீனக் கம்யூனிஸ்டு கட்சியும் மாவோவும் கோமிண்டாங் அரசில் பங்கு பெற்றனர். பின்னர், தேர்தலையும் கூட்டரசாங்கத்தையும் கடுமையாக வற்புறுத்தினர்.

உரிமைகளே அற்ற மாவட்ட தேர்தல்களில் கூட வியட்நாIல் ஹோசிமின் பங்கு கொண்டார்.

தோழர் லெனினின் கூற்றை பார்ப்போம் !

 “மிகவும் பிற்போக்கான ஒரு ‘நாடாளுமன்றத்தில்’ பங்கெடுத்துக் கொள்வதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளப் பிடிவாதமாய் மறுத்ததற்காக ‘இடதுசாரி’ போல்ஷ்விக்குகள் 1908-ல் எங்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர். 

”இந்த இடதுசாரிகள் - இவர்களில் பலர் கம்யூனிஸ்டு கட்சியின் போற்றத்தக்க உறுப்பினர்களாகப் பிற்பாடு இருந்த (இன்னமும் இருந்துவரும்) சிறந்த புரட்சியாளர்களாவர். 1905 ஆம் ஆண்டுப் பகிஷ்காரத்தின் வெற்றிகரமான அனுபவத்தைத் தமக்கு ஆதாரமாக கொண்டிருந்தனர்.

”1905 ஆகஸ்டில் ஆலோசனை அந்தஸ்துடைய ‘நாடாளுமன்றம்’ கூட்டப்படுவதாக ஜார் பிரகடனம் செய்தபோது போல்ஷ்விக்குகள் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் மென்ஷ்விக்குகளுக்கும் எதிரான நிலையை ஏற்று, அதனால் பகிஷ்காரம் செய்யும்படி அறைகூவினர். உண்மையில் இந்த ‘நாடாளுமன்றம்’ 1905 அக்டோபரில் மூண்ட புரட்சியால் துடைத்தெறியப்பட்டுவிட்டது. அக்காலத்தில், பAஷ்காரமே பிழையற்றதாக இருந்தது. பிற்போக்கான நாடாளுமன்றங்களில் பங்குகொள்ளாது இருப்பது பொதுவாகச் சரியானதே என்பதல்ல காரணம். எதார்த்த நிலைமையை பிழையின்றி மதிப்பிட்டோம் என்பதே காரணம்.  வெகுஜன வேலை நிறுத்தங்கள் முதலில் அரசியல் வேலை நிறுத்தமாகவும் பிறகு புரட்சிகர வேலைநிறுத்தமாகவும் முடிவில் ஒர் எழுச்சியாகவும் வேகமாய் வளர்ச்சியுற்று வந்தன என்பதே அப்போதிருந்த எதார்த்த நிலைமை. தவிரவும், முதலாவது பிரதிநிதித்துவ சபை கூட்டப்படுவதை ஜாரின் கையில் விட்டுவிடுவதா அல்லது அதனைப் பழைய ஆட்சியிடமிருந்து பறிப்பதற்கு முயற்சி செய்வதா என்பதே அக்காலத்தியப் போராட்டத்தின் மையப் பிரச்சினையாக இருந்தது.

 “எதார்த்த நிலைமை இதையொத்ததாக இருக்கும் என்ற நிச்சயம் இல்லாதபோதும் இருக்க முடியாதபோதும், இதையொத்த ஒரு போக்கும் இதே வளர்ச்சிவேகமும் இருக்குமென்ற நிச்சயம் இல்லாதபோதும் இருக்க முடியாதபோதும் பகிஷ்காரம் சரியானதல்ல”&லெனின் (“இடதுசாரி” கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு).

 “புதிய ஜனநாயகம்” இதழ் சார்ந்த அமைப்புகள் நாடாளுமன்றத்தை “போராட்ட களமாக” கூட பயன்படுத்த முடியாது என்று கூறுகின்றன. இதற்கு எந்த அடிப்படையையும் அவர்கள் நிறுவவில்லை. அறிவியல்பூர்வமான மெய்பிப்பு (நிரூபணம்) இல்லை. சி.பி.அய்., சி.பி.எம்மை பொருத்தவரை பரப்புரைக்களமாகக் கூட பயன்படுத்தியது இல்லை. இவர்களின் செயல்பாடுகளை  ஆதாரமாக்க முடியாது.

உலகப் பாட்டாளி வர்க்க அனுபவத்திலும் இவ்வாறு இருக்கவில்லை. லெனினின் வார்த்தைகளில், “போல்ஷ்விக்குகளான நாங்கள் படுமோசமான எதிர்ப்புரட்சி நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொண்டோம். இவ்வாறு பங்குகொண்டதானது, ருஷ்யாவில் முதலாவது முதலாளித்துவப் புரட்சிக்கு (1905) பிறகு, இரண்டாவது முதலாளித்துவப் புரட்சிக்கும் (பிப்ரவரி 1907), பிற்பாடு சோசலிச புரட்சிக்கும் (அக்டோபர் 1917) பாதையைச் செப்பனிடுவதற்குப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சிக்குப் பயனுள்ளதாக இருந்ததுடன் கூட, அத்தியாவசியமாகவும் இருந்ததென்பதை அனுபவம் தௌ¤வுப்படுத்தியிருக்கிறது.” - லெனின், மேற்படி நூல்.

சோவியத் வரலாற்றில் நாடாளுமன்றம் செப்பனிட பயன்பட்டதாகவும் கூறுகிறார்.

இவர்கள் (புதிய ஜனநாயகம் இதம்  அமைப்பினர்), மக்களின் உணர்வுநிலை, அரசியல் மட்டம், அவர்களின் தயார்நிலை இவைகளை புரிந்துக்கொள்ளாததின் விளைவுதான், மக்கள் அதிகாரத்தை கைப்பற்ற “ம௧கள் அதிகாரம்” என்ற முழக்கத்தை முன்வைக்கின்றனர். இது அப்பட்டமான “இடது வெற்று வாய்ச்சவடால்” முழக்கமாகும்.

ஏனெனில், மக்களை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எந்தவித தயாரிப்புகளையும் இவர்கள் செய்ததில்லை. இதற்கு துரும்பைக்கூட அசைத்ததில்லை. வர்க்கப் போராட்டம் என்றால் என்ன என்றுதான் இவர்கள் கேட்பார்கள். வெறும் அரசியல் பரப்புரை மட்டுமே செய்து சிறு நூறுபேர்களை திரட்டும் பலத்தை முப்பதாண்டுகளில் பெற்றுள்ளனர்.

ஆனால், தன்னெழுச்சியாக, தான்தோன்றித்தனமாக மக்களை அதிகாரத்தை கைப்பற்ற சொல்கிறார்கள். இது எப்படி நடக்கும் ? இதனால் என்ன பயன்? அடிப்படை அற்ற இவர்களின் முழக்கத்தால் ‘கியூ’ பிரிவு தடைசெய்ய வேண்டும் என்று பத்திரிக்கைகளில் செய்தி போட்டதும் இப்பொழுது இவர்கள் அதிர்ச்சியுற்று நிற்கின்றனர். முட்டுச்சந்தில் ஒட்டிக்கொண்டு விழி¢ பிதுங்கி நிற்கின்றனர்.

இந்த விமர்சனத்தை “புதிய முன்னோடி” முதல் இதழிலேயே (மார்ச - ஏப்ரல்  2015) முன்வைத்திருந்தோம்.  ஆனால், இவர்கள் கண்டு கொள்ளவில்லை. அலட்சியமாக புறக்கணித்தனர். இப்பொழுது முட்டுச்சந்தில் நிற்கின்றனர்.

மாவோயிஸ்டுகள் தமது மூலஉத்தி&செயலுத்தி (வரைவு) ஆவணத்தில் வாக்களிக்காமல் இருப்பதை சட்ட உரிமையாக்க வேண்டும்  என்று கோரி இருந்தனர். இது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் “நோட்டாவை” கொண்டு வந்ததின் மூலம் நிறைவேறி உள்ளது.

மாவோயிஸ்டுகள் இப்பொழுது என்ன செய்யப்போகிறார்கள்? புறக்கணிப்பை தொடரப் போகிறார்களா? அல்லது நோட்டாவை பயன்படுத்தப் போகிறார்களா? அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

பெருவாரியான மக்கள் நாடாளுமன்ற மாயையில் மூழ்கி உள்ளனர். இவர்கள்தான் புரட்சிகரப் பிரிவினர் ஆவர். இவர்களை எப்படி புறத்தில்  இருந்து புறக்கணிப்பதன் மூலம் உணர வைக்க முடியும்? மக்கள் அகவயமாக தயாரிக்கப்பட்டு திரட்டப்படும் பொழுதுதான் புறக்கணிப்பு சாத்தியம் அல்லது உடனடித் தேவைகள் (அ) கடும் நெருக்கடிகள் போன்ற சமயங்களில் தற்காலிகமாக சாத்தியப்படலாம். இவற்றை மாவோயிஸ்டுகள் மற்றும் புதிய ஜனநாயகம் உணரத் தயாராக இல்லை.

ஏனெனில், மாவோயிஸ்டுகள் மற்றும் புதிய ஜனநாயகம் இதழ் சார்ந்த அமைப்புகள் குழுவியம் மற்றும் வரட்டு கோட்பாட்டியத்தை அடிப்படையாகக் கொணடவர்கள். அதனாலேயே இத்தவறான போக்கை தொடர்ந்து கையாள்கிறார்கள்.

புறக்கணிப்பியம் “ஒருபக்க பார்வை” கொண்டதுதான். இது பங்கேற்பு என்ற மற்றொரு கூறை முற்றிலுமாக நிராகரிக்கிறது. “ஒருபக்க பார்வை” என்பது அகவியத்தின் (அகநிலைவாதம்) வெளிப்பாடாகும். பங்கேற்பியம் மற்றும் புறக்கணிப்பியம் இரண்டுமே இயங்கியலின்  “எதிர்மறைக் கூறுகளின் இருத்தல்”  என்ற கோட்பாட்டை நிராகரிக்கின்றது. தேர்தல் வடிவம் என்பது பங்கேற்பு, புறக்கணிப்பு என்ற இரண்டு அம்சங்களை கொண்டது என்பதே எதார்த்தமாகும்.

தேர்தல் வடிவத்தை ஆழமாக புரிந்துக்கொண்டதும் அதை நடைமுறைப்படுத்தியதும் தோழர் லெனினே ஆவார். அவரது மற்றொரு மேற்கோளை பார்ப்போம்.

 “1905-ல் போல்ஷ்விக்குகள் “நாடாளுமன்றத்தைப்” பகிஷ்கரித்ததால் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு மதிப்பிடற்கரிய அரசியல்  அனுபவத்தை அளித்துச் செழுமைப்படுத்திற்று.

 “சட்டபூவமான,  சட்டவிரோதமான போராட்ட வடிவங்களும் நாடாளுமன்ற, நாடாளுமன்றத்துக்கு புறம்பான போராட்ட வடிவங்களும் ஒன்றிணைக்கப்படுகையில், சில நேரங்களில் நாடாளுமன்ற வடிவங்களைக் கைவிடுவது பயனளிப்பதாக இருப்பதுடன் அவசியமும் ஆகிவிடுகிறது என்பதை அது தெளிவுபடுத்திற்று. ஆனால் இந்த அனுபவத்தைக் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே  காப்பியடிப்பதும் விமர்சனப் பார்வையின்றி பிற நிலைமைகளிலும் பிற சூழல்களிலும் அனுசரிப்பதும் பெருந் தவறாகிவிடும்.

 “1906-ல் போல்ஷ்விக்குகள் டூமாவைப் பகிஷ்கரித்தது சிறிய பிழையே என்றாலும் எளிதில் நிவர்த்தி செய்து கொள்ளத்தக்கதே என்றாலும் பிழையே ஆகும். 1907 விலும் 1908லும் அடுத்து வந்த ஆண்டுகளிலும் டூமாவின் பகிஷ்காரம் மிகவும் கடுமையான, நிவர்த்தி செய்வது கடினமாக தவறாகிவிட்டது. ஏனெனில் ஒரு புறத்தில், புரட்சி அலை வேகமாக உயர்ந்தெழுந்து, எழுச்சியாக மாறிவிடுமென்று எதிர்பார்க்க முடியாமல் இருந்தது.

 “மறுபுறத்தில், முதலாளித்துவ முடியாட்சி புதுப்பிக்கப்பட்டபோது உருவான வரலாற்று நிலைமை சட்டபூர்வமான செயற்பாடுகளையும் சட்ட விரோதமான செயற்பாடுகளையும் ஒன்றிணைத்துக் கொள்வதை அவசியமாக்கிவிட்டது. முழு நிறைவு எய்திவிட்ட இந்த வரலாற்றுக் கட்டம் இதற்குப் பிந்தைய கட்டங்களுடன் கொண்டுள்ள இணைப்பு இப்பொழுது மிகத் தெளிவாகப் புலப்படுகிறது.

முடிவுற்றுவிட்ட இக்கட்டத்தை இன்று நாம் திரும்பிப் பார்க்கையில், சட்டபூர்வமான போராட்ட வடிவங்களையும் சட்ட விரோதமான போராட்ட வடிவங்களையும், ஒன்றிணைத்துக் கொள்வது இன்றியமையாத கடமையாகும்.

மிகவும் பிற்போக்கான நாடாளுமன்றத்திலும் பிற்போக்கான சட்டங்களால் கட்டுண்டிருக்கும் இதர பல நிறுவனங்களிலும் (நோய்க்கால உதவிச் சங்கங்கள் முதலானவை) பங்கெடுத்துக் கொள்வது இன்றியமையாத கடமையாகும் என்னும் கருத்தோட்டத்தை போல்ஷ்விக்குகள் மிக உக்கிரமாய்ப் போராடி நிலைநிறுத்தியிராவிடில், 1908-14ல் அவர்களால் பாட்டாளி வர்க்கம் புரட்சிகரக் கட்சியின் உறுதியான மையப் பகுதியை (பலப்படுத்துவதும் வளர்த்திடுவதும் இருக்கட்டும்) சிதையாது பாதுகாத்துக் கொள்ளக்கூட முடியாமற் போயிருந்திருக்கும் என்று மிகத் தௌ¤வாய்த் தெரிகிறது -” லெனின்.

மேற்கண்ட லெனினின் கூற்றுக்கு மாறாக  மாவோயிஸ்டுகள் வரட்டுத்தனமாக இருந்ததால் ஆந்திராவில் இயக்கத்தை முழுமையாக இழந்தனர். தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவில் மக்கள் இயக்கத்தை (பகுதி சார்ந்து) இழந்தனர். முழுவதுமாக சிதைக்கப்பட்டது. மக்கள் திரளுக்கான அரசியல் அரங்கம் இன்றுவரை இல்லை.

தொகுத்து பார்ப்போமானால்,

தேர்தல் வடிவத்தை முழுமையாக எடுத்துக்கொண்டு அதில் முழுமையாக பங்கேற்பது அல்லது முற்றிலுமாக புறக்கணிப்பது இரண்டுமே தவறு. குறிப்பிட்ட ஒரு தேர்தலைப் பற்றியே உத்தி வகுக்கப்பட வேண்டும். அக்கட்டத்தில் உள்ள அரசியல் சூழல், மக்களின் தயார்நிலை, கட்சியின் பலம் இவற்றை கணக்கில் கொண்டு பங்கேற்பதோ (அ) புறக்கணிப்பதோ முடிவு செய்யப்பட வேண்டும்.

கட்சியின் கொள்கைகளை பரப்புரை செய்யவும் போராட்டக் களமாக்கவும் தேர்தல் பயன்படுத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்ற சனநாயக மாயையில் இருக்கும் மக்களிடம் இது போலி சனநாயகமே என்பதை அம்பலப்படுத்தி உண்மையான மக்கள் சனநாயகத்திற்காக அணிதிரட்டவும் தேர்தலைப்¢ பயன்படுத்த வேண்டும்.

Pin It