Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

ravana leela

ஆரிய பார்ப்பனக் கூட்டம், திராவிடர்களை வென்றதாக சித்தரிக்கப்பட்டதே இராமாயணம். இராமாயணத்தில் வரும் குரங்குகள், அசுரர்கள், அரக்கர்கள் யாவரும் திராவிடர்கள் தான். ஆக நம்மை இழிவுபடுத்தும் நோக்கில் தான் இவை இயற்றப்பட்டுள்ளது என்பது ஜவஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர் ஆகியோரால் கூட ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

இவை அனைத்தின் உச்சமாக, தமிழ் மாமன்னரான இராவணர் அவர்களை அரக்கனாக சித்தரித்து மகிழ்ந்தது ஆரிய பார்ப்பனக் கூட்டம். இந்த இழிவு வருடா வருடம் தொடர வேண்டும் என்ற நோக்கிலேயே "தசரா"வின் இறுதி நாளன்று "ராம லீலா" என்ற பெயரில் நம் மாமன்னரான இராவணர் அவர்களின் உருவ பொம்மையை எரித்து, நம்மை இழிவுபடுத்தி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 1974 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் சார்பாகவும், 1996 ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் சார்பாகவும் "ராவண லீலா" நடத்தி ராமன் உருவப் பொம்மை கொளுத்தப்பட்டது. ஆக 20 வருடம் கழித்து, நம் ராவண மாமன்னரின் உருவத்தை ஆரியம் கொளுத்திக் கொண்டாடுவதை கண்டித்து, நாம் "ராவண லீலா" நடத்தி ராமனின் உருவத்தை எரித்து பதிலடி தரவுள்ளோம்.

இந்த நிகழ்வு நடக்கக்கூடாதெனில் இந்திய அரசு "ராம லீலா"வை நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வைத்து, பிரதமர், ஜனாதிபதி, உள்த்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு எந்த பதிலும் வராத காரணத்தால், தந்தை பெரியார் திராவிடர் கழகம் "ராம லீலா" நடத்துவது உறுதி எனக் கழகத்தின் துணைத் தலைவர் துரைசாமி அவர்கள் கூறினார்.

இராவண லீலா நடத்தி ஆரிய ராமனை எரிக்கக் கூடாது என பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணியினர் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மிரட்ட இது குஜராத் அல்ல, இது தமிழ்நாடு.

திட்டமிட்டபடி 'இராவண லீலா' நடத்தி, ஆரிய ராமன், லட்சுமணன், சீதையின் உருவப் பொம்மைகளைக் கொளுத்துவோம். அதை சின்னக் குடுமி ராம கோபாலன் அல்ல, பெரிய குடுமி மோகன் பகவத் நினைத்தாலும் தடுக்க முடியாது.

இந்த நிகழ்வு சென்னையில் அக்டோபர் 12, மயிலை சமசுகிருதக் கல்லூரி அருகில் நடைபெறும்.

- தந்தை பெரியார் திராவிடர் கழகம்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Manikandan 2016-10-07 12:23
ஜயா லகடபாண்டிகளா இராவணன் ஒரு பிராமணன் ராமன் ஒரு சத்திரியன், உங்களுக்கு எல்லாம் தமிழ் ஒழுங்காக படிக்க தெரிந்தால் கம்ப ராமாயணத்தை படிக்கவும். அடுத்தவன் மனைவியை அபகரிப்பவனை கொண்டாடும் அளவிற்கு இந்த திராவிட கழகத்தினர் தரம் தாழ்ந்து இருக்கிறார்கள்.

இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த ஆரிய திராவிட பொய்களை வைத்து காலம் தள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை.
Report to administrator

Add comment


Security code
Refresh