கூடங்குளம் அணுவுலைகள், மீத்தேன் திட்டம் ஆகியவற்றை தொடர்ந்து தமிழ்நாட்டின் சூழலியல் மீது அடுத்த படையெடுப்பை நிகழ்த்தக் காத்திருக்கிறது நியுட்ரினோ. திட்டம் நல்லதா, கெட்டதா என்று இன்னமும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். மக்கள் பிரச்னைகளை எடுத்துப் போராடும் வரலாறு கொண்ட இடதுசாரிகளோ நியூட்ரினோவைப் பொருத்தவரையில் கண்மூடித்தனமான அறிவியலின் பக்கம் நின்று பேசுகிறார்கள்.

நாங்கள் அறிவியலை எதிர்ப்பவர்கள் அல்ல.

அறிவியலை வேண்டாம் என்றும் சொல்லவில்லை. ஆனால் அது மக்களுக்கான அறிவியலாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை.

நியூட்ரினோ மக்களுக்கான அறிவியலா? வாருங்கள், விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

நியூட்ரினோ திட்டம் யாருக்காக?

1. இந்த திட்டம் அமைய இருக்கிற பகுதி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? மேற்கு தொடர்ச்சி மலை நமது நதிகளின் பிறப்பிடம். அப்படி ஒரு உயிர் பன்மயம் வாய்ந்த சூழலில் இந்த திட்டம் தேவையா?

2. இந்த திட்டத்திற்கும் அமெரிக்காவின் பெர்மி லேப்பிற்கும் என்ன தொடர்பு? இது இந்தியா based நியூட்ரினோ என்றால் வேறு எந்த நாடுகள் இதில் உள்ளன? தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நியூட்ரினோக்கள் எந்த மாதிரியான விசயங்களை உருவாக்கும்?

3. இது மக்களுக்கான அறிவியலா?

வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆழ்வார்பேட்டை CIT காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் விவாதிப்போம் - பூவுலகின் நண்பர்கள்

தொடர்புக்கு ஜார்ஜ் 9841624006

neutrino meeting

Pin It