தமிழீழ இனப்படுகொலை இவ்வளவு ஆதாரங்களுடன் அம்பலமான பிறகும், ஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்துகின்ற மோசடியான அமெரிக்கத் தீர்மானத்தை பாடையில் கட்டி எரிக்கும் போராட்டம், வரும் 19.03.2013 அன்று தமிழகமெங்கும் நடைபெறுகின்றது. தமிழகமெங்கும் நடைபெறும் இப்போராட்டத்தில், பல்வேறு இன உணர்வாளர் அமைப்புகளும், மாணவர்களும் திரளாகப் பங்கேற்க உள்ளனர்.

சென்னை

மோசடியான அமெரிக்கத் தீர்மானத்தை பாடையில் கட்டி எரிக்கும் போராட்டம், வரும் 19.03.2013 அன்று காலை 10 மணியளவில் நடைபெறுகின்றது. சென்னை நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி வாயிலிருந்து, அமெரிக்கத் தீர்மானத்தை பாடையில் ஏற்றிக் கொண்டு கிளம்பும் இறுதி ஊர்வலம் நுங்கம்பாக்கம் சுடுகாட்டை அடைந்த பின்னர் அங்கு தகன நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளில், மாணவர்களும், தமிழ் உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்கும்படி வேண்டும் என அறிவிப்பும் விடப்பட்டுள்ளது. தமிழக இளைஞர் முன்னணி நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. (தொடர்புக்கு: 9047162164, 9841949462)

ஓசூர்

ஓசூரில் அமெரிக்கத் தீர்மானத்தை பாடை கட்டி எரிக்கும் போராட்டம், பேருந்து நிலையத்தில் தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் நடைபெறுகின்றது. பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கும் ஊர்வலம் சுடுகாட்டில் முடிவடைந்து, அங்கு அமெரிக்கத் தீர்மானம் எரிக்கப்படும். (தொடர்புக்கு: 9092812132)

சிதம்பரம்

சிதம்பரம் அண்ணா சிலை அருகில் நடைபெறும் அமெரிக்கத் தீர்மான எரிப்புப் போராட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையேற்கிறார். தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். (தொடர்புக்கு: 9042223563)

பெண்ணாடம்

பெண்ணாடம் வால்பட்டறையிலிருந்து நடைபயணமாக செல்லும் தோழர்கள், பேருந்து நிலையம் அருகில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நிகழ்த்துகின்றனர். தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு நிகழ்வை ஒருங்கிணைக்கிறார். (தொடர்புக்கு: 9442429006)

மேலும் பல்வேறு இடங்களில் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளில், மாணவர்களும், தமிழ் உணர்வாளர் அமைப்புகளும், தோழர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

- தமிழக இளைஞர் முன்னணி

Pin It