கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பற்றிய உண்மைத் தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்காமல், யூகங்களையும், வதந்திகளையும் பரவவிட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது அணுசக்தித் துறை. மத்திய, மாநில அரசுகளும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
 
தகவல்கள் தராமல், பேரிடர் பயிற்சி தராமல், நம்மை துச்சமாக நடத்தும் மத்திய, மாநில அரசுகளுக்கும், அணுசக்தித் துறைக்கும் நமது எதிர்ப்பைத் தெரியப்படுத்தவும், யுரேனியம் நிரப்பப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக கைவிடக் கோரியும், அணுமின் நிலையத்தில் நிரப்பப்பட்டுள்ள யுரேனியத்தை அகற்றவும், கூடங்குளம் திட்டத்தை சூரிய சக்தி, காற்றாலைகள், கடலலை மின் நிலையங்கள் கொண்ட தேசிய மாதிரி எரிசக்திப் பூங்காவாக மாற்றக் கோரியும் எதிர்வரும் பிப்ரவரி 27, 2013 புதன்கிழமை அன்று தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மூன்றிலும் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்திருக்கிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி துறைமுகமும், திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் அணுமின் நிலையமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியிலுள்ள பூம்புகார் படகுப் போக்குவரத்து நிலையமும் முற்றுகை இடப்படும். நமது ஆதரவாளர்கள், அமைப்புக்கள், இயக்கங்கள், கட்சிகள் தமிழகத்தின் பிற இடங்களில் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி கூடங்குளம் அணுமின் நிலயத்தை மூட ஒத்துழைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
போராட்டக்குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.