இவர்கள் இன்ன தொழில் தான் செய்ய வேண்டும் என்ற வர்ணாஸ்ரம நிலைமை முற்றிலும் மாறியுள்ள இன்றைய சூழ்நிலையில் கூடை முடைதல் போன்ற தொழில்களை செய்து வரும் குறவர் இன மக்களை இன்றும் குற்றப்பரம்பரைகளாக நடத்துவதும், அவர்கள் செய்யாத குற்றத்திற்கெல்லாம் காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தப்படுவதுமான நிலை என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்களே ஆகும். ஒடுக்கப்பட்ட மக்களான குறவர் இன மக்கள் பெரும்பாலும் கல்வி அறிவு அற்றவர்களாக கூலி வேலை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்த உழைக்கும் மக்களை திருட்டு பட்டம் சுமத்தி காவல் நிலையத்தில் அடித்து துவைப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலையில் களவு போன நகைக்கு திருச்சி மாவட்டம் இனான் குளத்தூரில் வாழும் முருகேசன் மற்றும் 25 பேரை காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்தனர் குளித்தலை காவல் நிலையத்தை சேர்ந்த காவல் துறையினர். குற்றத்தை ஒத்துகொள்வதாக எழுதி கொடுத்தால் விட்டுவிடுவதாக அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 21 படியான எந்தவிதமான நடைமுறையையும் மேற்கொள்ளாமல் அவர்களை கைவிலங்கிட்டு அடித்ததில் இன்று பலர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு குற்றம் நடைபெற்றால் எந்தவிதமான புலனாய்வும் செய்யாமல் குறவர் சமுதாயத்தை சேர்ந்த யாரைவது கைது செய்து பொய் வழக்கு போடுவது காவல் துறையின் வாடிக்கையாகிவிட்டது. குளித்தலை காவல் நிலைய காவல் துறையின் இந்த அராஜக போக்கை கண்டித்து சமூக ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடைபெறுகிறது.

தமிழக அரசே, காவல் துறையே!

செய்யாத குற்றத்திற்கு சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்திய கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலைய காவலர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வன்கொடுமை சட்டப்படி இழப்பீடு வழங்கு!
குறவர் குற்றங்கள் என்று காவல் துறைக்கு பயிற்சி தரும் போக்கை உடனே நிறுத்து!
குறவர் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடு!

வன்கொடுமைக்கு எதிரான கூட்டமைப்பு நடத்தும் மனித உரிமை மீறலுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைப்பாளர் : பிரேம் குமார்

கண்டன உரை:

ராதா கிருஷ்ணன் - அலை குடிகள் மக்கள் இயக்கம்
எஸ்.டி. கல்யான சுந்தரம் - ஆதித் தமிழர் கட்சி
தனபால் - பெரியார் திராவிடர் கழகம்
பா.வளர்மதி - உழைக்கும் பெண்கள் பாதுகாப்பு மையம்
நிலவழகன் - த.ஒ.வி.இ
மற்றும் பலர்

இடம் : கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகில்
நாள் : 18 .03 .2012
நேரம் : மாலை 3 .00 மணி முதல் 6.00 மணி வரை

Pin It