Loveஅர்த்தங்களின்றிக் கழியும்
அந்தி நேரங்களில்
ஒரு சூனியக்காரியின்
மர பொம்மையாய்
மாறியது மனது
ஏக்கங்கள் தசைகளில்
ஏறி அதை
இறுக்கி இறுக்கி
மேலும் உணர்வுகளைப்
பலப்படுத்தியது
இரணம் இரணமாய்
வழிந்து செல்லும்
உணர்ச்சிக் கோடுகளின்
வழியே மீதமிருந்த
வெட்கமெல்லாம்
கரைந்து அழிய
தனிமையில் ஒதுங்கிய
மானின் முதல்
அலட்சியத்திற்காக
ஊடுறுவும் ஓநாயின்
கண்களோடு தசைகளைத்
துளையிட்டுத் திறக்கும்
காமம்
மழை முடிந்த பின்னும்
வழிந்து முடியாத
இலையின் தூறலாய்
அவள் கடந்த பின்னும்
தொடரும் கண்கள். 

ஒளியவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.