வீட்டுக்குள் வந்த அம்மாவை இரு வாண்டுகளும் கட்டிக் கொண்டன.

ஒரு வாரப் பிரிவு முத்தங்களாலும்.... முயக்கங்களாலும் பறிமாறிக் கொண்டன. குழந்தைகள் கதைகள் சொன்னார்கள். அப்பாவின் மீது சில குற்றச்சாட்டுகள் சொன்னார்கள். இனி ஒரு வாரத்துக்கு அம்மா வீட்டில் இருப்பாள் என்ற எண்ணமே அவர்களை குதூகலமடைய வைத்தன.

குழந்தைகள் விளையாடச் சென்றதும்... கணவன் பின்னிருந்து அணைத்துக் கொண்டான். கழுத்தில் மூச்சும் பேச்சும் கலந்து குறுகுறுத்தன.

"ஒரு போன் கூட பண்ண முடியாதாப்பா...! நீ இல்லாம எவ்ளோ கஷ்டம் தெரியுமா...? இன்னும் எத்தன நாளைக்கு இப்டி...." அவன் முகத்தை எங்கோ வைத்துக் கொண்டு கேட்டான்.

ஆழமான பார்வையை பதிலாகத் தந்தாள் வழக்கம் போல்.

அவன் பார்த்த பார்வைக்கு அணைத்துக் கொண்டு முத்தமிட்டாள் . அது ஈரமுத்தம்... ஒரு வார முத்தம்.

குழந்தைகளுக்கு பார்த்துப் பார்த்து செய்தாள். பிள்ளைகளின் பள்ளி நோட்டுகள் பார்க்கப்பட்டன. வீட்டு நிலவரம்... ஒரு வார கால செலவு..... கேஸ்...காய்கறி... துணி துவைத்தல்.... வீடு பெருக்குதல்.. என்று வீட்டை அந்த முதல் நாளிலேயே மாற்றிப் போட்டாள். கணவனுக்குப் பார்த்துப் பார்த்து செய்தாள். மீசையில் இருக்கும் நரை முடி ஒன்றை பற்களால் கடித்துப் பிரித்தாள்.

காதலும்....வாழ்வும் அந்த வீட்டில் அலை ஆடியது. கடல் கடந்த மெல்லிசை வீடெங்கும் பரவியது.

*

இரண்டு கணவர்களும் இரண்டு கண்கள்தான் அவளுக்கு. ஒருவன் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவன். ஒருவன் கல்யாணம் செய்து காதலித்துக் கொண்டவன். மொத்தம் நான்கு குழந்தைகள்.

அவள் பெயர் ம்ம்ம்ம் ....

பேரல்லாம் எதுக்கு....தேவதையாகக் கூட இருக்கலாம்.

- கவிஜி

Pin It