பயணத்தின்
பெயர் மற்றும் முகவரி
நட்பென குறிப்பெடுக்கப்படுகிறது!

மெல்லினம் அவளெனவும்..
வல்லினம் நானெனவும்,
முரண்பாடுகள் ஒன்றுவது போல்
சித்தரிக்கப்படுகிறது  பயண வழி !

தோள் சாய்தல் பகிர்வதாகவும்
கரம் கோர்த்தல் பிணைப்பதாகவும்
மடிசாய்தல் இளைப்பாறுவதாகவும்
வழித் தடங்களில் சுட்டப்பட்டுள்ளது!

இந்நெறிமுறைகளுக்குட்பட்டு
பாதைகள் தீர்மானப்பட..                                   

நடுவானத்தில்,

பிறிதொரு வழிப்போக்கனின் விழியில்
மெல்லினம் காதல் சுவையுணர்கிறாள்

முடியாது நீளும்
என் பயணத்தில்
இன்று நட்பிற்குப் பதில்
தனிமை விரல்கள்! 

-          ரசிகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It