பரிசுஅவள்
வரிசையாக
பெற்றபோது
வீட்டினர்
வாழ்த்தியதில்லை;
ஆனால்
பரிசைத்
தவறவிட்ட
அந்த ஒரு தினம்-
அவள் மாமி
கேட்ட கேள்வி-
உனக்கு
எப்படி
கிடைக்காமல்
போச்சுது?
இதுவே
அவள்
என்றும்
போற்றும்
பரிசு
- மாதங்கி (
பரிசுகீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.