Vacuumவெற்றுத்தாளில்
எதுவுமில்லையென
வீணாய் விவாதிக்கிறது
உலகம்

பாறையில் ஒழிந்திருக்கும்
சிற்பங்களென
வண்ணங்கள் குழைந்த
ஓவியங்களென
பரிணமித்த
எழுத்துருக்களென

எல்லைகளற்ற பிம்பங்கள்
படிந்துக்கிடக்குமதில்
அவசியமற்றவைகளை
விலக்க விலக்க
முடிவற்று விரிகிறதொரு
வானம் 

ஷாஜஹான் பீர்முகம்மது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.