Man


வாத்துக்கூட்டங்களில்
சில
அன்னங்களைப் பார்த்தேன்
என்றது தவறு
வாத்துக்கள்
வாத்துக்களே
எல்லாம் வாத்துக்களே
என்றிருந்துவிட்டால்
எந்த அவஸ்தையும் இல்லை
வாத்துக்கள்
அன்னங்களாக
முகம்காட்டும் வேளையிலும்
அன்னங்கள்போலத்
தோன்றியத் தருணத்திலும்தான்
கணக்குத் தவறாகிப்போனது
எல்லாம் வாத்துக்களே
என்பதில்
எத்துணை நிம்மதி...!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.