Ladyகால் கடுக்க நடந்து வந்தேன்
காதலி உனைக் கண்டேன்
பாதம் பிடித்து வலி தீர்த்தாய்

வாலிபத்து பருவப்பசியை
வேலி தாண்ட அனுமதித்து
காதலி நீ கனிவாய் தீர்த்தாய்

இதயத்து அன்புப்பசியை
இதமாக என்னிடம் நடந்து
பதமாக பாவை நீ தீர்த்தாய்

வாய் ருசிக்கு வயிற்றுபசியை
வசமாக உணவு படைத்து நீ
ரசமாக சமைத்து தீர்த்தாய்

நாசிக்கு நறுமணமும்
காதுக்கு நல் இசையும்
தலைக்குள்ளே தவிப்பாய்

தமிழறிவுப் பசிக்கும்
அமிழ்தாய் ஈடு தந்த நீ
அட்சயப் பாத்திரம் ஆனாய்..

ஆனாலும் உனக்கு நான்
ஆசையுடன் தந்தேன் என்
அலட்சியம் மாத்திரம்,பதிலாய்!

ராதிகா பாலாஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.