Dogவளர்ப்பு நாய்
வாலாட்டி
குழைந்து குனிந்து
குதித்து பிஸ்கட்டுத்
துண்டுகளை பிடித்து விளையாடும்
சலுகைகளுக்காக..

நாய்சோப்பு
நாய்த்துண்டு
என்று தலைதுவட்டி விடப்படும்
சீருடை அணிந்து
சிலிர்த்து நிற்கும்
அன்னியர் வந்தால்
விரைத்து நின்று எஜமானனுக்குப்
பதில் தானே குரைத்து விரட்டும்

சிறப்பு வளர்ப்பு நாய்
இட்ட ஏவலை
ரத்தம் சொட்டச் சொட்ட
அபகரித்து வரும்
அதற்காக பதக்கம் பெறும்
பதக்கங்களில்
எஜமான்களின் பெயர் இருக்கும்

இந்த நாய்கள்
யாரைத் துரத்த வேண்டுமோ
அவர்களுக்கு சேவை செய்யும்


முனைவர் ம.இளங்கோவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.