எழுந்து
குளித்து
உடுத்து
வணங்கி
பார்த்து
உண்டு
சென்று
அறிந்து
புரிந்து
தெளிந்து
திரும்பி
அருந்தி
தொழுது
மகிழ்ந்து
உணர்ந்து
முடித்து
உண்டு
உறங்கி
எழுந்து...
பேடியாய்...
அடுத்தடுத்து
அநியாயமாய்க் கழித்த
வாழ்வை மறந்து
வறட்சிகள் மறைய
வளர்ச்சிகள் ஓங்க
வாழ்த்துக்கள் நிறைய
என்னுள் நீ வந்து
ஏகாந்தமாய் உலவிடு
என்னில் பரவிடு
என்றென்றும் ஒளிகொடு
தமிழே! என் காதலே!


மகேத்ரா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.