Sea wavesமண்ணையும்
புனலையும்
நெய்திட
யுகங்களாய்
நெய்தல் நிலங்கள்!

ராட்சத அலைகள்
நுழைந்திட
கதவற்ற குடிசைகள்!

அமுதைப் பொழியும்
அழகொளிர் நிலவால்
கிளர்ந்தெழும்
உப்பும் புலவும் கொண்டு
உக்கிர நீர்க்கரங்கள்!

கடலின்
கவனமற்ற
ஆரோகனத்தில்
அன்றாட விடியல்!

முடிந்தால் வருவேன்
என்றவர் சொற்களில்
முரண்படும் பொருள் என்ன?
முடிந்துபோனபின்
வருவதெங்கே?

முடியவில்லை எதுவும்..
எங்களுக்கென்று
வெவ்வேறு உயரங்களில்
புனல் மாலைகள்!

வந்ததும் விளங்கவில்லே
போனதும் புரியவில்லே!
அலைக்கழிப்பது அதற்கு
அன்றாட வேலையாகிவிட்டது! ......... 

ப.திருநாவுக்கரசு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 
Pin It