எதிர்காலத்தின் நிழல்

நிசத்தின் வெளிச்சம்!

கனவு ஒரு கடல்

அதில் நீந்துவதற்கு

நீச்சல் தெரியவேண்டும்.

மீள்வதற்கு பாய்ச்சல்

தெரிந்திருக்கவேண்டும்

நாட்குறிப்பு நாளேடு

இரண்டையும்

எழுதி படித்திடல் வேண்டும்

முத்தான கவிதைகள் எழுதி

முத்தமிழறிஞரிடம்

பாராட்டு பெற்றிடல் வேண்டும்

சத்தான கவிதைகளை

சமுதாயத்திடம் சேர்த்திடல்வேண்டும்

பெண்டு பிள்ளைகளோடு

உண்டு மகிழ்ந்திடல்வேண்டும்

பேரன் பேத்திகளோடு

தொண்டு செய்திடல்வேண்டும்

திருப்பணிகள் செய்பவர்கள்

தெருப்பணிகள் செய்திடல்வேண்டும்

சிக்கனம் சேமிப்பு

நகரத்தாரிடம் கற்றிடல்வேண்டும்.

ஓரு கொடி வளர்வதற்கு

தடி ஊன்றுகோல் என்றால்

மனிதனின் வளர்ச்சிக்கு

கனவு ஒரு தூண்டுகோல்

கனவு கற்பனையல்ல

நடந்த சம்பவங்களின்

உயிரோட்டம்.

நடக்காமல் போய்விட்டால்

கண்ணீரோட்டம்.

விடலைப்பருத்தின் கனவு

விடாமல் தொடர்ந்தால்

வேதனையை உண்டுபன்னும்.

விட்டு விட்டு வந்தால்

அமிர்தத்தை அள்ளித்தரும்.

விட்டு; விட்டு வந்தாலும்

விடாமல் தொடர்ந்தாலும்

யாரையும் விட்டுவிடுவதில்லை

கனவு.

காசி.தமிழ்ச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It