அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக

பொதிகழுதை கண்டு புலம்பும் -அதற்கிருக்கும்

நல்ல குணம்கூட நாலுபேர்க் கில்லை:இக்

கல்வியென் மேலெறிந்த கல்!



எழுதிகை சோர்ந்து விரல்தேய்ந்தி ரேகை

அழிந்துக்கண் பார்வை குறைந்து -பழுதாகிக்

கண்ணாடி போட்டபின்னும் ‘ஹோம்ஒர்க்செய்| என்கிறீங்க

என்னாங்க டீச்சர் இது!



விடிந்தால் டியூஷன்விட் டால்பள்ளிக் கூடம்

முடிந்து விளையாடப் போனால் -படிங்கற

வார்த்தையைத்தான் பாட்டிவரை வாய்நிறைய கற்றிருக்காள்

ஆர்கிட்ட சொல்லி அழ!



ஹோம்ஒர்க்கை செய்தகை யோடு படித்துவிட்டு

கேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா -வீம்போட

சீரியல் பார்க்கணுண்ணு சீறுகிறாள் என்மம்மி

போரடிக்கு தேவாழ்க்கை போ!

அகரம் அமுதா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It