அருணாக்கயிறில் குடித்தனம் நடத்திய
அந்த அழுக்கு அரைக்கால் டிரவுசரின்
வாசனையை உணர முடிகிறது...
என் பழைய பள்ளிக் கட்டடத்தை
கடந்து போக நேர்கையில்

பலமுறை என் தத்தா செத்துப்போனதாய்
அறிவித்த விடுமுறை விண்ணப்பங்களையும்
ஆரஞ்சு மிட்டைக்கான ஆர்வக் கோளாறில்
தேசியக் கொடியைத் தலைகீழாக
குண்டூசியில் ஏற்றிய
ஆகஸ்டு பதினைந்துகளையும்
எல்லப்பனின் தகர டப்பாவை
மறைத்து வைத்ததனால் ஏற்பபட்ட மனஸ்தாபத்தில்
இன்று வரை பேசாமலிருப்பதும்
கூட்டாஞ்சோத்துக்காக சுள்ளிகள் பொறுக்கிய
சொப்பு விளையாட்டுகளையும்
அசைபோடத் தோன்றுகிறது...
"மௌஸ் ஹேங்க் ஆயிடிச்சி டாடி"
என்கிற என் மகனின் குரலால்... 

முத்தாசென் கண்ணா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.