எங்களை மதிக்க வேண்டாம்
உங்கள் கால்களை கொஞ்சம்
நகர்த்துங்கள் போதும்.
உங்கள் செருப்பின் கீழ்
மிதிப்பட்டு உயிர்
அறுபட்டு கிடக்கிறோம்

இந்த பிரபஞ்சத்தின்
ஏத்தனையோ பிரமாண்ட
வளர்ச்சிக் கண்ட “உங்கள் அறிவு”
எங்களை மட்டும்
சாக்கடையின் மிதவையாகவே
சபித்துக் கெண்டிருப்பதுதான்
புரியவில்லை.

ஏங்கள் துயர்துடைக்க
ஏத்தனிக்காத நீங்கள்
எங்களை அருவறுத்து ஒதுக்க
எந்த அறுகதையும் அற்றவர்கள்

எங்களை
உயிர் பிண்டமாய் கூட
மதிப்பதில்லை உங்கள் பகுத்தறிவு
எங்களை
கேவலமான அடைமொழியால்
கீறி பார்ப்பதே உங்கள் சுகம்.

சராசரி சமுதாயத்தின்
சாடல் கிடக்கட்டும்
பேனா பிடிக்கும்
பிதாமகன்களே!
நீங்களேனும்
திருத்தி எழுதுங்களேன்
எங்களை
‘திருநங்கை’ என்று.

ஏனெனில்
மனிதர்களில்
மறுநடவு செய்யப்பட்ட
எங்களுக்கு
அதுதான் ஓர்
அழகிய அங்கீகாரம்.

சி.கருணாகரசு. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

More articles by சி.கருணாகரசு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.