ஏழெட்டு திங்களுக்கு

More articles by சி.கருணாகரசு

பிந்தைய நிகழ்வுதான் என்றாலும்,
எழுதி வைத்திருந்தேன்
இருபாலினத்திலும்
உனக்கான பெயர்களை

உன்வரவு
உறுதியானதிலிருந்து
பிரபஞ்சம் பெரிதாய் இல்லை
என் மகிழ்ச்சியை விட.

உன் மென்மையை உணர
உன் அசைவுகளை ரசிக்க
உன் மொழியில் லயிக்க
காத்திருந்தேன் கனவுகளோடு.

பத்தாம் மாதம்
என் வானமாகமல்
பத்துவார
வானவில் ஆனதேன்?
வந்துக் கொண்டே இருக்கும் - உன்
வரவுக்கான
வாழ்த்துகளை என்ன செய்ய?

இப்பொழுதும்,
பிரபஞ்சம் பெரிதாய் இல்லை.
என் வலியை விட.

கொட்டிக்கிடக்கிறது
குங்குமப்பூ

சிரமப்பட்டுத்தான்
சிரிக்கிறேன் மற்றவர்முன்

சி.கருணாகரசு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.