முதன் முதலில் அத்தையிடந்தான்
அந்த பிணந்தின்னும் கிழவி
பற்றிய கதையைக் கேட்டாள்.

என்றைக்குமான
பயத்தையும், பயங்கரத்தையும்
அக்கிழவி, அவளது மனதின்
அடியாழத்தில் புதைத்துவிட்டாள்.

அக்கால இரவுகளில்
பயந்து அரற்றிக்கொண்டேயிருந்தாள்.

பெண் வாசத்தைக் கண்டவுடன்
தின்றுவிட வந்துவிடும் கிழவி குறித்து
பயங்கள் கவ்விக் கொண்டிருக்கின்றன,
இப்போதும்.

அக்கிழவியின் மகன்தான்,
அவள் கணவன் என்பதை
அவள் அறிந்திருக்கவில்லை, இன்னமும்.

அவளின் மைந்தர்கள்,
எங்கும், எப்போதும் பதுங்கியுள்ளனர்,
எப்பெண்னை எப்போது தாக்கலாமென? 

ம.ஜோசப் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.