More articles by அறிவுநிதி
- வேர்த்து வழிகிறது நினைவு (22 அக் 2012)
- மீட்சி (23 ஏப் 2010)
- நின் சலனம் (23 ஏப் 2010)
- காதலின் குறியீடு (23 ஏப் 2010)
- ஜன்னலோரம் (23 ஏப் 2010)
கனிபறிக்கும் ஆவலில் மரமேறுகிறான்
மரம் ஏதுவாகிறது
மரத்திலுள்ள கனிகள் அதன்
காலத்தை காட்டிக்கொடுக்கிறது
கனிகளை பறிக்கிறான்
விழ மறுக்கிறது
மரத்தோடு கனிகளை சுவைக்கிறான்
பிறகு
எறும்பின் பாவனையில்
மரமெங்கும் பரவுகிறான்
மரம் வேரோடு சாய்வதுபோல்
அசைகிறது
பெறும் மிரட்சியுடன் அதன்
கிளைகளை பற்றிக்கொண்டு
அவனும்
மரத்தோடு அசைகிறான்
உயிர்வதை துவங்குகிறது
மெல்ல மெல்ல கீழிறங்குகிறான்
பரபரப்பும் பயமும் தீர்ந்தவனாய்
தலைமுறைபகிர்வுகளாகிறது
- அறிவுநிதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.