Deathமழைக்கால முடிவின் விபரீதம் அது.

மழையின் நீளக்கரங்களில்
தன்னுடல் சரித்தது பெருமரம்
வேர்கள் வெளிச்சம் கண்டதும்
கூசின; மரண பீதியில் உலர்ந்துவிட்டன.

மெளனமாய் இருவர் வந்து
ரம்பத்தால் அறுக்கத் தொடங்கினர்;
ஒருவன்
தந்தையின் மரணப்படுக்கையில் அருகிலிருந்ததை
நினைத்தவாறே...

மற்றவன்
கூடலுக்குப் பின் முகம் கோணி அழுத
மனைவியை நினைத்து வெட்கித்தவாறே...

பிணத்தை மொய்க்கும் பறவைகளின் பேரோலம் படர
மரம் இரண்டாய்ப் பிளந்தது

குட்டி ரேவதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.