More articles by எம்.ரிஷான் ஷெரீப்
- ஜப்பான் பேனா நண்பி - இஸீரு சாமர சோமவீர (01 பிப் 2012)
- அரசியல் (16 மே 2011)
- ட்ரோஜனின் உரையாடலொன்று (24 பிப் 2011)
- மரணம் துரத்தும் தேசத்துக்குரியவனாக...! (24 ஏப் 2010)
- விதிக்கப்பட்ட மரணம்! (23 ஏப் 2010)
எதனாலும் நிற்காமலும்
எதுவாகவும் ஆகாமலும்
எப்படிப் போகிறது வாழ்க்கை...?
சடுதியாய்ச் சந்திப்புகள் - குருதிச்
சகதியாய் விபத்துகள்,
எவராலும் தடுக்க முடியாதவையாக
அன்றாடம் நிகழ்கின்றன.
விரும்பியபடியே வாழ்க்கையெனினும்,
வாழ்க்கையின் மௌன ஓவியத்தை
விரும்பிய நிறங்களைக் கொண்டு
வரைய முடிவதேயில்லை !
வாழ்க்கை போகிறது
அதனுடனே நானும்...
சிலவற்றைப் பெற்றுக் கொண்டும்...
நிறைய இழந்து கொண்டும்...
- எம்.ரிஷான் ஷெரீப் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.