More articles by க.அருணபாரதி
- தமிழ்த் தேசியம் பேசினால் இனப்படுகொலை உருவாகுமா? (26 செப் 2019)
- ராம்குமாரைக் கொல்ல சொல்லும் நமக்கு ரவுடிகளைப் பற்றிப் பேசத் தகுதியிருக்கிறதா? (07 ஜூலை 2016)
- நலத்துறையில் தனியார்மயம் வதைபடும் மக்கள் - வெளிப்படும் உண்மைகள் (26 மே 2016)
- தோற்றுப் போன செயலலிதாவும் – ‘மாற்று’ அரசியலும் (21 மே 2016)
- இணைய சமத்துவம் கோருவோம் (08 நவ 2015)
உன் மேல்
உள்ள ஆசையில்
தானோ என்னவோ
நீ உலா போக வெளியே
வரும் பொழுது தான்
கருகருக்கிறது வானம்,
மழையாய் உன்னை
முத்தமிட...
மழைத்துளிகள் மேலே
படாதவாறு குடை கொண்:டு
தடுத்தாய் நீ...
ஆசையோடு வந்த
மழைத்துளிகள் கீழே விழுந்து
கண்ணீராகி விட்டன..
தன் பலத்தைக் காட்டி
உன்னை மயக்க
நினைத்தது மின்னல்..
உன் சிரிப்பைக்
கண்டு அதற்கும்
வந்தது இன்னல்..
உன் பாதம் பட்டு
உரசிச் சென்றதால்
மழைத்துளிகள் மோட்சம்
அடைந்து
நதியில் கலந்தன..
மழையைக் கூட
மகிமைப் படுத்தி
எழுதச் சொல்வது
காதல்..
எழுதும் போது
வான் மேகம் போல
வார்த்தைகளுக்குள் மோதல்....
.
வானத்தில் மட்டுமல்ல
என் மனதிலும்,
மழை..
- க.அருணபாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )