அவருக்குப் பிடித்தாற்போல்
எழுதிப்பார்த்தேன்.
இவருக்குப் பிடிக்கவில்லை!

இவருக்குப் பிடிக்கும்படி
எழுதிப்பார்த்தேன்
அவருக்குப் பிடிக்கவில்லை!

எல்லோருக்கும் பிடிக்கும்படி
எழுதுவது எப்படி?
யோசித்து.. யோசித்து..
முதலில்
எனக்குப் பிடித்ததை
எழுதிப் பார்க்கிறேன்.

எல்லோருக்கும் பிடிக்கிறது!

இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.