More articles by முருகன்
- மாநிலங்களும் ஒன்றியமும் - 5 (12 அக் 2023)
- அணு உலைகள் - உலகமே எதிர்க்க, வாய் மூடிக் கிடக்கும் தமிழகம்! (23 மே 2011)
- நான் என்றால் நீ (22 ஏப் 2010)
- நளினம் (22 ஏப் 2010)
சின்னதாய்
தூரல்
சிறு வெள்ளித்
துளியாய்
சிந்திய
அந்தி நேரம்...
சில அடி
தூரத்தில்
சில்லென்று
ஒரு தென்றல்...
குடை
பிடித்துச் செல்லும்
மின்னலாய் நீ...
பக்கம் வந்து
பதட்டமின்றி
நான்
பேசிய
முதல் வார்த்தை...
சிறு
பதட்டத்தோடு
நீ
பேசிய
பதில் வார்த்தை...
பசியற்று
படுக்கை பிடிக்காமல்
பால் நிலா பார்த்து
பகல் போல் கழிந்த
அன்றைய இ(னிய)ரவு...
இதையெல்லாம் - என்
இதயத்தில்
பச்சை குத்தி
பதியவைத்து
பாதுகாத்தது...
இன்று
என்னை - நீ
பாராமுகமாய்
பரிதவிக்க வைத்துப்
பார்க்கத்தானோ...???
- முருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )