ஏற்புடையதாக இல்லை

இயற்கையான

என் இயல்புகளின்

புறத்தோற்றங்கள் உனக்கு

 

மாறுதல் குறித்தோ

சிறு மாற்றம் தேடியோ

குறைந்த பட்சம்

உன் ஒப்புதல் வேண்டியோ

பிறவிக்குணங்களை

வேண்டியமட்டும்

வெளிப்படாமல்

பாதுகாத்துக்கொள்கிறேன்

 

அனுசரித்தலின்

அடிப்படை குணங்களென

மூலக்கூறுகளை மாற்றி அமைத்ததில்

முன் மொழியப்படுகிறேன்

ஆகச்சிறந்த மனைவி

நான் மட்டும் தானென்று

 

-பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.