பின்தொடர்ந்து
காற்றின் சங்கீதம் கேட்டு
இலைகளின் கரவொலிக்கு நின்று
ஆற்றில் புரளும் நீர்ச்சடைகளின்
கற்றைகளைப் பிரித்து
வானம் பனியென மண்ணிறங்கும்
அதிகாலை ஒற்றையடிப் பாதை வழியே
தாவரச் சிற்பங்களிடையே
நடந்து கண்டேன்
ஒரு பூவின் நிறம்
- அழகிய பெரியவன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.