வானில் தொங்கும் மேகங்கள்
அந்தரவெளியில் அசைய
எழுத அமர்வேன்.

ஜன்னல் கதவைக் காற்று வந்து தட்ட
அதைத் திறக்கும் முன்
காகிதங்களை ஒழுங்கு செய்வேன்

யானையளவு மழை வந்து
ஜன்னலை அடைத்துக்கொள்ள
ஏதும் எழுதாமல்
மழை எப்படிப் பறவைகளை வருத்தும்
எனக் குமைவேன்

ஓர் ஓவியத்தின் காலடி
காகிதத்தில் பதிந்ததும்
எழுதியது போதுமென எழுவேன் 

குட்டி ரேவதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.